ஏதுமறியா குழந்தை போல் உறங்குகிறாள் – மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அம்மா குறித்து ஜெகன் போட்ட உருக்கமான பதிவு.

0
289
jagan
- Advertisement -

சூர்யா நடித்த அயன் படத்தின் மூலம் பிரபலமான விஜய் டிவி ஜெகன் தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் போட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. ஜெகன் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இவர் விஜய் டி.வியின் ஒளிபரப்பான `கனெக்‌ஷன்’, கடவுள் பக்தி மிருக பக்தி, ஜவ்வு மிட்டாய் போன்ற படங்களில் வித்தியாசமான பல கெட்டப்புகளை போட்டு சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்தார். இந்த மூலம் இவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்புகள் கிடைத்து. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு சினிமாவிலும் கலக்கி வருகிறார் ஜெகன்.

-விளம்பரம்-

2005-ம் ஆண்டு வெளியான `கண்ட நாள் முதலாய்’ படத்தின் வாயிலாக அறிமுகமானவர் ஜெகன். அதன்பிறகு `அயன்’ படத்தில் பரிட்சயமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு, பையா, கோ, அம்புலி, யாருடா மகேஷ், பட்டத்து யானை, மரியான், என்றென்றும் புன்னகை, இந்தியா பாகிஸ்தான், அநேகன் போன்ற 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து சமீபத்தில் கூட தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான “நம்பி எபக்ட்” என்ற படத்தில் நடித்திருந்தார்.

- Advertisement -

கடந்த ஆண்டு பிரபு தேவா நடிப்பில் வெளியான “பொய்க்கால் குதிரை” என்ற படத்தில் மதன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இப்படம் வசூல் ரீதியாக மக்கள் மத்தியில் நல்ல வர்ரேப்பை பெற்றது. இதனை தொடர்ந்து கடந்த 3ஆம் தேதி அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியான “பல்லு படாம பாத்துக்க” என்ற படத்திலும் நடித்திருந்தார். இப்படம் கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கி பல பிரச்சைகளுக்கு பிறகு தற்போது தான் முடிந்தது. ஆனால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.

ஜெகன் இன்ஸ்டா பதிவு :

இந்த நிலையில் தான் விஜய் ஜெகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தன்னுடைய தாய் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் “என் தாய் சேயாகிறாள் உடல் நலம் குறைந்நு எங்களை ஈன்றவள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாள். ஏதுமறியா குழந்தைப்போல் உறங்குகிறாள் எங்களை ஈன்றபோது எத்தனை இரவுகள் இப்படிதானே கவலை தோயத்த அக்கறையுடன் எங்களை கவனித்திருப்பாய்.

-விளம்பரம்-

இந்த ஓர் இரவில் என் நன்றி கடனை திரும்ப தர இயலாது என்பதை எண்ணி கூனிப்போகிறேன். உன் நலம் வேண்டி என் சிவனை வேண்டுகிறேன் என்று பதிவிட்டுள்ளார் விஜய் டிவி ஜெகன். இந்நிலையில் தாயின் உடல் நிலை எண்ணி வருத்தமடைந்த ஜெகனை அவரது ரசிகர்கள் விரைவில் உங்களுடைய தாய் குணமடைந்து விடுவார் ஆறுதல் கூறிஎன்று பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement