தமிழ் சினிமாவில் பல்வேறு சகோதர சகோதரி நட்சத்திரங்கள் சினிமாவில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் சூர்யா – கார்த்தி, ஜீவா – ரமேஷ், அருண் விஜய் – வனிதா, சிம்ரன் – மோனால், நக்மா – ஜோதிகா இப்படி கூறிக்கொண்டே போகலாம், அந்த வகையில் தமிழ் சினிமாவில் தேவையணி மற்றும் நகுலும் ஒரு முக்கிய நட்சத்திர நடிகர்களாக திகழ்ந்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் சினிமாவில் 90-ஸ்களில் வெளிவந்த படங்களில் விஜய், அஜித், என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றவர் நடிகை தேவயானி. இவர் மும்பையை சேர்ந்தவர். இவரது அப்பாவின் பெயர் ஜெயதேவ். இவருக்கு இரண்டு தம்பிகள் உள்ளனர். அதில் நகுலும் நடிகர் என்பது பலரும் அறிந்த ஒன்று.
தொடக்கத்தில் நடித்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் இப்போது வெற்றிக் கொடுக்க போராடிக் கொண்டிருக்கிறார். இறுதியாக செய் என்ற படத்தில் நடித்திருந்தார் நகுல். ஆனால், அந்த திரைப்படம் எதிர்பார்த்தபடி வரவேற்பை பெறவில்லை. தற்போது நடிகர் நகுல், எரியும் கண்ணாடி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சுனைனா நடித்து வருகிறார்.
இதையும் பாருங்க : பாப்லிசிட்டி பாஸ், குட்டி புலி வில்லன் நடிகரின் உதவியை கேலி செய்த நபர். ஆதரவாக களமிறங்கிய நெட்டிசன்கள்.
மேலும், இந்த படத்தினை காதலில் விழுந்தேன், மாசிலாமணி போன்ற படங்களை சச்சின் தேவ் என்பவர் தான் இயக்கி வருகிறார். 90 காலகட்டத்தில் நடிகை தேவையணி முன்னனி நடிகையாக திகழ்ந்து வந்தாலும், தேவையானியின் சகோதரருக்கு சினிமாவில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு புகழ் கிடைக்கவில்லை என்பது தான் உண்மை.
இந்த நிலையில் நடிகர் நகுல், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கடந்த வந்த பாதை குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே மும்பையில் தான். என்னுடைய சகோதரியின் சினிமா வாழ்க்கைக்காக நாங்கள் சென்னைக்கு வந்தோம். என்னுடைய அக்கா சினிமாவில் கொடிகட்டிப் பறந்த காலத்தில் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டால். அவள் ஒருவர் தான் எங்கள் குடும்பத்தில் சம்பாதிக்கும் ஆளாக இருந்த நிலையில் எங்களை கடுமையான பாதிப்பில் விட்டுச் சென்றது. ஒரு சில மாதங்கள் கழித்து என்னுடைய அம்மா அருகில் ஒரு ஆடிஷன் நடப்பதாகவும் என்னை சென்று அதில் கலந்து கொள்ளுமாறு கூறினார்கள். நானும் அங்கே சென்று பார்த்தேன் அங்கே ஒரு மிகப் பெரிய வரிசை நின்று கொண்டிருந்தது.
மேலும் அந்த படத்தில் ஐந்து பையன்கள் இருப்பார்கள். அதற்காக ஆயிரம் பேர் நேர்காணல் செய்த பட்டிருந்தது. எனவே அது நான் தேர்வாக மாட்டேன் என்று எண்ணி அந்த படத்தின் கதாபாத்திரம் எனக்கு பிடிக்கவில்லை என்று என் அம்மாவிடம் கூறிவிட்டேன். ஆனால், சிறிது நேரம் கழித்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் நான் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் உடனே என்னுடைய கீபோர்டை எடுத்துக்கொண்டு வருமாறு கூறினார்கள். அதன் பின்னர் தான் நான் படத்தில் நடித்தேன் அந்த படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கின்போது ஷங்கர் சார் எனக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். அதன் பின்னர் தான் என்னுடைய கேரியரில் நான் ஏதாவது முன்னேற்ற வேண்டும் என்று நினைத்தேன்.
இதையும் பாருங்க : நைட் 11.30 மணிக்கு கதவ தட்டினாங்க. நல்ல வேலை நான் வீட்டில் இல்லை – செம்பருத்தி கார்த்தி
என்னை பற்றி தெரியாமலேயே பலர் என்னை விமர்சனம் செய்தார்கள் சினிமாவில் இருக்கும் பல்வேறு நபர்களும் ஒரு மன அழுத்தத்தில் போராடி வருகிறார்கள். பாய்ஸ் படத்திற்கு பின்னர் அதே போன்ற கதையில் எனக்கு பல்வேறு வாய்ப்புகள் வந்தது. ஆனால், ஒரு சரியான வாய்ப்பிற்காக நான் காத்திருந்தேன். அதன்பின்னர் தான் காதலில் விழுந்தேன் பட வாய்ப்பு கிடைத்தது. என்னுடைய உடல் எடையை குறைத்த பின்னர் சினிமாவில் விட்டு சென்று ராணுவத்தில் சேரலாம் என்று கூட பயிற்சிகளை மேற்கொண்டேன். குண்டாக இருந்ததால் பல்வேறு கேலிகளுக்கு உண்டான ஒரு நபருக்கு இந்த புதிய தோற்றம் ஒரு நம்பிக்கையை கொடுத்தது. அதன் பின்னர் என்னை நான் ஆரோக்கியமான ஒரு நபராக மாற்றிக்கொண்டேன்.
பல்வேறு சவால்களுக்கு பின்னர் இன்று எனக்கான ஒரு அடையாளத்தை நான் உருவாக்கி இருக்கிறேன் .என்னுடைய குடும்பம் என்னுடைய மனைவி இவர்கள் தான் என்னுடைய மிகப்பெரிய பலம் .எங்கள் வீட்டில் நான்கு நாய்களும் 4 பூனைகளும் இருக்கிறது இதில் ஒன்றை தவிர மற்ற அனைத்துமே தத்தெடுக்கபட்டவை தான். அவைகள் தான் என்னுடைய கவலைகளை மறக்கச் செய்கிறது. இன்று நான் ஒரு நடிகரோ, பாடகரும் இல்லை இசையமைப்பாளரோ இவை அனைத்தும் நான் திட்டமிட்டது கிடையாது. ஆனால், என்னுடைய வாழ்க்கையும் என்னுடைய ரசிகர்களும் இங்கே நான் இந்த நிலைமைக்கு நிற்பதற்கு காரணமாக இருக்கிறார்கள் என்று பதிவிட்டுள்ளார்.