பாப்லிசிட்டி பாஸ், குட்டி புலி வில்லன் நடிகரின் உதவியை கேலி செய்த நபர். ஆதரவாக களமிறங்கிய நெட்டிசன்கள்.

0
2624
rajasimhan

கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் என்ற நோய் தான் உலக நாடுகளை அச்சுறுத்து வருகிறது. சைனாவில் பரவ தொடங்கிய இந்த வைரஸ் தற்போது பல்வேறு நாடுகளில் பரவி இதுவரை 82,000 பேர் உயிரிழந்துள்ளார்கள். இந்தியாவை பொறுத்த வரை 4789  பேருக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும்,124 பேர் உயிரிழந்துள்ளனர். . தற்போது தமிழகத்தை பொறுத்த வரை 790 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 8 பேர் உயிரிழந்து உள்ளார்கள். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நோய் பரவல் அதிகரித்தால் அதை சமாளிக்க தேவையான மருத்துவமனை உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு சில மாநிலங்களில் இந்த ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையும் பாருங்க : நைட் 11.30 மணிக்கு கதவ தட்டினாங்க. நல்ல வேலை நான் வீட்டில் இல்லை – செம்பருத்தி கார்த்தி.

- Advertisement -

ஊரடங்கள் தினக்கூலியை நம்பி இருந்த பல குடும்பத்தினர் வேலை இல்லாமல் கடும் பதிப்படைந்துள்ளனர். இதனால் அரசும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள், நல்லுள்ளம் கொண்ட சிலர் என்று உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல வில்லன் நடிகர் ராஜ சிம்மன், தினமும் 100 பேருக்கு உதவி அளித்து வருகிறார். இவர் தற்போது இதை செய்து வரவில்லை கடந்த 180 நாட்களாக செய்து வருகிறார்.

Image

தமிழில் என்னைஅறிந்தால், கொம்பன், நண்பேண்டா, கடம்பன் போன்ற பல படங்களில் வில்லன் நடிகராக நடித்திருக்கிறார். மேலும், விஷால் நடிப்பில் வெளியான மருது படத்தில் கூட வில்லனாக நடித்திருக்கிறார். நடிகர் ராஜ சிம்மன் தனது சொந்த செலவில் தினமும் 100 பேருக்கு உணவளித்து வருகிறாராம். தற்போது கொரோனா சமயத்தில் இவர் செய்து வரும் செயலால் பலர் பசியாறி வருகின்றனர்.

இதையும் பாருங்க : வாத்தி கம்மிங் பாடலுக்கு மணிமேகலை போட்ட ஆட்டம். புலம்பிய ஹுசைன்.

-விளம்பரம்-

;மேலும், அடிக்கடி தனது சமுக வலைத்தளத்திலும் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் ராஜ சிம்மன் தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று 178 ஆவது நாள் மதிய உணவு பகிர்ந்துண்ணும் நிகழ்வு இடம் பிரசாத் ஸ்டுடியோ அருகில் அருணாச்சலம் ரோடு சாலிகிராமம் சென்னை என்று பதிவிட்டிருந்தார். இதற்கு ட்விட்டர் வாசி ஒருவர், 180 நாளும் ஒரே சட்டை தானா ?

எங்கேயோ இடிக்குதே? ஊர்கை டப்பா காலியே ஆகாதா. பப்லிசிட்டி பாஸ் என்று மோசமாக கமன்ட் செய்திருந்தார். இதற்கு பதில் அளித்த ராஜ சிம்மன், உங்கள் அளவுக்கு நான் வசதியானவன் இல்லை ? உங்களைப் போல் ஒவ்வொரு நாளும் புத்தம் புது சட்டை மாற்றுவதற்கு என்னிடம் இருப்பதை உடுத்துகின்றேன் நன்றி என்று பதில் அளித்துள்ளார். நடிகர் ராஜசிம்மனின் பதிலை கண்ட பல ரசிகர்களும் இதுபோன்ற ஆட்களுக்கு நீங்கள் பதில் அளிக்க வேண்டாம் என்று பதிவிட்டு ராஜசிம்மன் செயலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Advertisement