மூன்று மாதங்கள் கழித்து தீபாவளி நன் நாளில் தனது மகளின் முகத்தை காட்டிய நகுல்.

0
1131
nakul
- Advertisement -

தீபாவாளி பண்டிகையை முன்னிட்டு தனது மகளின் முகத்தை வெளியுலகிற்கு காட்டியுள்ளார் நடிகர் நகுல். அட்அட்றா நாக்க முக்கா நாக்க முக்கா’ என்ற பாடலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர் நடிகர் நகுல். இவர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதோடு தன்னுடைய முதல் படத்திலேயே ஒரு பாடலையும் பாடி உள்ளார். அதை விட நடிகர் நகுல் அவர்கள் தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை தேவயானியின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. இது பலருக்கும் தெரிந்தது தான்.

-விளம்பரம்-

மேலும், நகுல் அவர்கள் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல், பின்னணி பாடகரும் ஆவார். இவர் பல படங்களுக்கு பாடல்களை பாடியுள்ளார். குறிப்பாக விக்ரம் நடிப்பில் வந்த அந்நியன் படத்தில் காதல் யானை என்ற பாடலை இவர் தான் பாடியது. இதனை தொடர்ந்து கஜினி, வேட்டையாடு விளையாடு, வல்லவன், காதலில் விழுந்தேன், கந்தகோட்டை, வல்லினம், கதை திரைக்கதை வசனம் இயக்கம் ஆகிய படங்களுக்கு பின்னணிப் பாடல்கள் பாடியுள்ளார்.

- Advertisement -

சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல் நடிகர் நகுல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் நடுவராக பங்கு பெற்றுவந்தார் . கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டான்ஸ் vs டான்ஸ் என்ற நிகழ்ச்சியின் நடுவராகவும் இருந்து வந்தார். நடிகர் நகுல் அவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு சுருதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகி குழந்தை இல்லாமல் இருந்து வந்த நகுல் கடந்த ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி நடிகர் நகுல் பெண் குழந்தைக்கு அப்பாவானார். குழந்தை பிறந்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆன நிலையில் நடிகர் நகுல் தனது மகனின் முகத்தை காட்டாமல் இருந்த வந்தார் இப்படி ஒரு நிலையில் நேற்று தீபாவளி திருநாளை முன்னிட்டு தனது மகனின் முகத்தை ரசிகர்களுக்கு காட்டியிருக்கிறார் நகுல்.

-விளம்பரம்-
Advertisement