விஜயகாந்த் வீட்டிற்கு குடும்பத்தோடு சென்ற நெப்போலியன், பிரேமலதா செய்த விஷயம்- காரணம் இதுதான்

0
356
- Advertisement -

விஜயகாந்த் வீட்டிற்கு நடிகர் நெப்போலியன் குடும்பத்துடன் சென்று இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் நெப்போலியன். இவர் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் . இந்த தம்பதிக்கு தனுஷ், குணால் என்கிற இரண்டு மகன்கள் உள்ளனர். நெப்போலியனின் இளைய மகன் குணால் மஸ்குளர் டிஸ்ட்ரோஃபி என்ற தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பதால் தொடர்ந்து சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

இதனால் இவர்கள் குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டார்கள். இந்நிலையில் நெப்போலியன் மூத்த மகன் தனுஷிற்கு திருமணமாக இருக்கும் தகவல் கடந்த வாரம் இணையத்தில் வைரலாகி இருந்தது. அதாவது, இவருடைய மூத்த மகன் தனுஷிற்கு தான் நிச்சயதார்த்தம். இந்த நிச்சயதார்த்த பத்திரிகையை நெப்போலியன் அவர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கொடுத்திருந்தார். பின் இது தொடர்பாக இவர் பதிவு ஒன்றும் போட்டிருந்தார்.

- Advertisement -

நெப்போலியன் பதிவு:

அதில் அவர், அன்புள்ள நண்பர்களே, தமிழ் சொந்தங்களே என்னுடைய சகோதரர்களுடன் சென்று நம்முடைய மாண்புமிகு முதல்வர் அண்ணன் தளபதி அவர்களை சந்தித்து என்னுடைய மூத்த மகன் தனுஷுக்கும், அக்ஷயா என்கிற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயதார்த்த நிகழ்வுக்கான அழைப்பிதழை கொடுத்து வாழ்த்துக்களை வாங்கி இருக்கிறோம் என்று கூறியிருந்தார். ஆனால், நெப்போலியன் மகன் திருமணம் செய்து கொள்ள இருக்கும் மணமகள் குறித்த விபரம் சரியாக தெரியவில்லை.

விஜயகாந்த் வீட்டிற்கு சென்ற நெப்போலியன்:

மேலும், நெப்போலியனின் மூத்த மகன் தனுஷிற்கு எங்கேஜ்மென்ட் நடந்து முடிந்திருக்கிறது. இது தொடர்பான புகைப்படமும் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் நடிகர் நெப்போலியன் மீண்டும் இந்தியாவிற்கு தன்னுடைய குடும்பத்துடன் வந்திருக்கிறார். இவர் தன்னுடைய மனைவியோடு விஜயகாந்த் வீட்டிற்கு சென்று விஜயகாந்தின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இருக்கிறார்.

-விளம்பரம்-

பிரேமலதா கொடுத்த பரிசு:

பின்பு பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் விஜயகாந்த் புத்தகம் ஒன்றை நெப்போலியனுக்கு பரிசாக கொடுத்திருக்கிறார். அதை தொடர்ந்து விஜயகாந்தின் மகன்களை பார்த்து பழைய நிகழ்வுகளை நெப்போலியன் கண்கலங்க பேசியிருக்கிறார். மேலும், இது தொடர்பாக நெப்போலியன் பதிவு ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர், நான் விஜயகாந்த்துடன் நடிகர் சங்க வேலைகளில் அதிகமாக ஈடுபட்டிருந்தேன்.

விஜயகாந்த் குறித்து சொன்னது:

அவரை மாதிரி ஆளுமை மிக்க நபரை எங்கேயுமே பார்க்க முடியாது. விஜயகாந்துக்கு ‘பத்மபூஷன் விருது’ அவர் இறந்த பிறகு தரப்பட்டது. ஆனால், அவர் உயிரோடு இருக்கும் போது கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இருந்தாலும் அவருடைய சேவை, உழைப்புக்கு கிடைத்த சரியான அங்கீகாரம் என்று பகிர்ந்திருக்கிறார். தற்போது இந்த பதிவும் புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில் தான் விஜயகாந்த் உடல்நல குறைவால் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement