நடிகர் நெப்போலியனின் வருங்கால மருமகள் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் நெப்போலியன். இவர் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்துகொண்டார் . இந்த தம்பதிக்கு தனுஷ், குணால் என்கிற இரண்டு மகன்கள் உள்ளனர். நெப்போலியனின் இளைய மகன் குணால் மஸ்குளர் டிஸ்ட்ரோஃபி என்ற தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பதால் தொடர்ந்து சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நெப்போலியன் மூத்த மகன் தனுஷிற்கு திருமணமாக இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, இவருடைய மூத்த மகன் தனுஷிற்கு நிச்சயதார்த்தம் நடைபெற இருக்கிறது. இந்த நிச்சயதார்த்த பத்திரிகையை நெப்போலியன் அவர்கள் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை நேரில் சந்தித்து கொடுத்திருக்கிறார். பின் இது தொடர்பாக இவர் பதிவு ஒன்றும் போட்டிருக்கிறார்.
நெப்போலியன் பதிவு:
அதில் அவர், அன்புள்ள நண்பர்களே, தமிழ் சொந்தங்களே ஜூலை இரண்டாம் தேதி நேற்று காலையில் என்னுடைய சகோதரர்களுடன் சென்று நம்முடைய மாண்புமிகு முதல்வர் அண்ணன் தளபதி அவர்களை சந்தித்து என்னுடைய மூத்த மகன் தனுஷுக்கும், அக்ஷயா என்கிற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயதார்த்த நிகழ்வுக்கான அழைப்பிதழை கொடுத்து வாழ்த்துக்களை வாங்கி இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.
நடிகர் திரு. நெப்போலியன் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை சந்தித்து, தனது மகன் திருமண நிச்சயதார்த்த விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார். pic.twitter.com/vqTCk3vRA5
— CMOTamilNadu (@CMOTamilnadu) July 2, 2024
நெப்போலியன் மகன் திருமணம்:
தற்போது இவரின் பதிவு இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பலருமே நெப்போலியன் மகனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து மணப்பெண் யார்? எந்த ஊர்? எப்போது கல்யாணம் என்றெல்லாம் கேட்டு வருகிறார்கள். நெப்போலியன் மகன் திருமணம் செய்து கொள்ள இருக்கும் மணமகள் குறித்த விபரம் சரியாகவில்லை. அதோட நெப்போலியன் மகனின் திருமணத்தில் திரை பிரபலங்கள் பலருமே கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
நெப்போலியன் திரைப்பயணம்:
பல போராட்டங்களுக்கு பிறகு தான் நெப்போலியனுக்கு 1991ல் சினிமா வாய்ப்பு கிடைத்தது.
இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘புது நெல்லு புது நாத்து’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவருடைய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்.
நெப்போலியன் படங்கள்:
மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.
இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் அரசியல்வாதியும் ஆவார். தற்போது இவரது குடும்பம் அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தின் வசித்து வருகின்றனர். இவருடைய இளைய மகனுக்காக தான் இவர்கள் அமெரிக்காவில் செட்டில் ஆகி உள்ளனர். நடுவில் சிறிது காலம் நெப்போலியன் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து இருந்தார். தற்போது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்து கலக்கி கொண்டு வருகிறார்.