நடிகர் சங்கத் தலைவர் நடிகர் நாசர் குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பு – திரையுலகினர் அஞ்சலி.

0
2030
- Advertisement -

நடிகர் நாசரின் தந்தை உயிரிழந்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக நாசர் திகழ்ந்து வருகிறார். இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்துள்ளார். இவர் இயக்குனர் இமயம் பாலச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த கல்யாண அகதிகள் என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருந்தார்.

-விளம்பரம்-

இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் மட்டுமில்லாமல் திரைக்கதை, வசனம், பாடலாசிரியர், பாடகர் என பன்முகங்களை கொண்டவர். அதோடு இவர் தென்னிந்திய நடிகர் சங்க தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.மேலும், தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் காலகட்டம் துவங்கி தற்போது வரை பல்வேரு படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருகிறார் நாசர்.

- Advertisement -

நாசர் தந்தை குறித்த தகவல்:

அதுமட்டுமில்லாமல் இவர் நடிகராக வேண்டும் என்பது இவருடைய தந்தை மெஹபூப் பாஷா உடைய ஆசையாம். இதற்காக நாசர் முதலில் நடிப்பு பயிற்சி கல்லூரியில் சேர்ந்தார். அதற்கு பிறகு பெரிதளவு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றவுடன் தாஜ் ஹோட்டல் ஒன்றில் சப்ளையராக நாசர் வேலைக்கு சென்றார். பின் தன்னுடைய தந்தையின் கனவு எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்று பல போராட்டங்களுக்கு பிறகு தான் அவர் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.

நாசர் தந்தை இறப்பு:

தற்போது நாசர் தென்னிந்திய சினிமாவிலும் ரசிகர்கள் மத்தியிலும் இவ்வளவு பிரபலமாக இருப்பதற்கு காரணம் நாசரின் தந்தையால் தான் என்பது குறிப்பிடத்தக்கது. பல வருடங்களாக ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தையும் நாசர் பிடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது இவர் படங்களில் மட்டும் இல்லாமல் வெப் சீரிஸ் களிலும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இந்த நிலையில் நாசரின் தந்தை இறந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, நடிகர் நாசரின் தந்தை மெஹபூப் பாஷா. தற்போது இவருக்கு 95 வயதாகி இருக்கிறது.

-விளம்பரம்-

பிரபலங்கள் இரங்கல் தெரிவிப்பு:

இன்று இவர் உடல்நிலை குறைவு காரணமாக வீட்டிலேயே இறந்து இருக்கிறார். செங்கல்பட்டு தட்டன் மலை தெருவில் தான் நடிகர் நாசரின் தந்தை வீடு இருக்கிறது. இந்த தகவல் அறிந்த உடன் நாசரும் அவருடைய சகோதரர் ஜவஹரும் தன்னுடைய தந்தை இல்லத்திற்கு வந்திருக்கிறார்கள். தற்போது அவருடைய இறுதி சடங்கிற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. நடிகர் நாசரின் தந்தை இறந்த செய்தி வெளியானது தொடர்ந்து பிரபலங்கள் பலரும் இரங்கலை தெரிவித்து தருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் சோசியல் மீடியாவில் கூட ரசிகர்கள் இரங்கலை கூறி வருகிறார்கள்.

Advertisement