கமல் கேட்டும் மருதநாயகம் படத்தில் நடிக்க மறுத்துள்ள நெப்போலியன், அவரே சொன்ன காரணம் – வீடியோ இதோ.

0
6371
marudha
- Advertisement -

தமிழ் சினிமாவில் உலக நாயகன் கமல் நடிப்பு மட்டும் அல்லாமல் பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்டவர். கமல் இயக்கி தயாரித்த பல படங்கள் வெற்றி பெற்றிருக்கிறது. அந்த வகையில் கமல் தயாரிப்பில் உருவாக இருந்த மறுத்த நாயகம் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. மருதநாயகத்தின் வாழ்கை வரலாற்றை திரைப்படமாக தயாரிக்க 1997ம் ஆண்டில் கமல் ஹாசன் முடிவுசெய்தார். இந்த நிகழ்வில் பிரித்தானிய மகாராணியாரும் கலந்துகொண்டார். இசைஞானி இளையராஜாவும் இதற்கு இசையமைக்க முன்வந்தார். ஆனால் நிதிநெருக்கடியினால் இந்த முயற்சி இடைநடுவில் கைவிடப்பட்டது.

-விளம்பரம்-
Actor Nepoleon - Virumandi (Tamil)

இடையில் கூட இந்த படத்தை எடுக்க பல முயற்சிகளை செய்தார். ஆனால், அந்த முயற்சிகள் யாவும் கைவிடபட்டது. இப்படி ஒரு நிலையில் மருதநாயகம் படத்தில் நடிக்க கமல் கேட்டும் மறுத்துள்ளதாக பிரபல நடிகர் நெப்போலியன் கூறியுள்ளார். தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் நடிகர் நெப்போலியன்.இவர் 1991 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த புதுநெல்லு புதுநாத்து என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார்.

இதையும் பாருங்க : இது தேசிய கொடியை அவமதிக்கும் செயல் – பார்வதி நாயரின் சுதந்திர தின போஸ்டால் எழுந்த சர்ச்சை.

- Advertisement -

அதன் பின்னர் பல படங்களில் தொடர்ந்து ஹீரோவாக மட்டும் நடித்து வந்தார். ஹீரோ வாய்ப்பு குறைந்த பின்னர் தான் வில்லன் கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார் நெப்போலியன். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நெப்போலியன், கமலின் ,மருதநாகயம் படத்தில் நடிக்க மறுத்த காரணம் குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், நான் நடித்த சீவிலப்பேரி பாண்டி படத்தை பார்த்துவிட்டு கமல் என்னை பாராட்டினார்.

உண்மையில் அவர் தான் அந்த படத்தில் நடிக்க இருந்தது என்று என்னிடம் கூறினார். அதன் பின்னர் அவர் என்னிடம் மருதநாயகம் படத்தில் நடிக்க என்னை அழைத்தார். ஆனால், அது மிகவும் கொடூரமான வில்லன் கதாபாத்திரம். அப்போது நான் ஹீரோவாக நடித்து வந்தேன். அதனால் அப்போது வில்லனாக நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டேன். அதன் பின்னர் பல ஆண்டுகள் கழித்து கமல் இயக்கிய விருமாண்டி படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்தார் என்று கூறியள்ளார் நெப்போலியன்.

-விளம்பரம்-
Advertisement