நடிகர் நெப்போலியன் மனைவி மற்றும் மகன் யார் தெரியுமா ? புகைப்படம் உள்ளே !

0
1744

நடிகர் நெப்போலியன் 1963ஆம் ஆண்டு திருச்சியில் பிறந்தார். இவருடைய உண்மையான பெயர் குமரேசன் துறைசாமி. இவரது குடும்பத்தில் 6 குழந்தைகள். இவர் 5வது மகனாக பிறந்தார்.

Napoleon and His Wife

திருச்சியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் படித்தார். பின்னர் தனது 27 வயதில் உதயம் என்ற படத்தினை பார்த்து இவருக்கு நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. 1991ல் பாரதிராஜவால் புது ‘நெல்லு புது நாத்து’ என்ற படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார். அதன்பின்னர் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்தார் நெப்போலியன்.

1.சின்ன தாயி
2.இது நம்ம பூமி
3.ஊர் மரியாதை
4.பங்காளி
5.தர்ம சீலன்
6.மறவன்
7.எஜமான்
8.எட்டுப்பட்டி ராசா
9.சுயம்வரம்
10.அய்யா, என பல படங்களில் நடித்தார்.

Actor nepollian

Napoleon-cover

Napoleon Family

கடந்த 2009ஆம் ஆண்டு முதல் அரசியலில் இருந்து வருகிறார் நெப்போலியன். திமுக சார்பில் போட்டியிட்டு ஒரு முறை எம்.எல்.ஏவாக ஆகியுள்ளார். அழகிரியின் விசுவாசியாக ஒருந்த நெப்போலியன், 2014ல் திமுகவை விட்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். ஏனெனில் திமுகவில் இருந்து அழகிரியை நீக்கிவிட்டனர்.

இவருக்கு ஜெயசுதா நெப்போலியன் என்ற மனைவியும், தனுஷ் நெப்போலியன் மற்றும் குனால் நெப்போலியன் என்ற மகன்களும் உள்ளனர். தற்போது இவரது குடும்பம் அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தின் வசித்து வருகின்றனர்.

Napoleon

Nepolian

ஏனெனில் அவருடைய மூத்த தனுஷ் நெப்போலியனுக்கு தசைவளக் குறைபாட்டு நோய் உள்ளது. இதனால் கடந்த பல வருடங்களாக அமெரிக்காவில் தங்கி அதற்கு மருத்துவ சிகிச்சை எடுத்து வருகின்றனர். தற்போது தனுஷ் இயல்பான வாழ்க்கை வாழ்ந்து வருவதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் நெப்போலியன்.