வளையல் வியாபாரிக்கு தேடி வந்த சினிமா வாய்ப்பு, கூட நட்பால் கேடாய் போன வாழ்க்கை. நடிகர் பாண்டியனின் கதை.

0
738
Pandian
- Advertisement -

திரைப்பட உலகம் ஒரு மாய உலகம். இங்கே திறமை உழைப்பு என்பதை தாண்டி வேறு ஒரு விசயம் இருக்கிறது. அதற்கு பெயர் நேரம் அல்லது யோகம்…!! திறமை.. புகழ். ரசிகர்களின் ஏகோபித்த பேராதரவு..என அனைத்தும் இருந்தும் திடீரென காரணமே இல்லாமல் காணாமல் போன நடிகர் நடிகைகளை பற்றிய ஒரு திடீர் தொடர் இது…!! ஏழாவதாக இந்த வரிசையில் நாம் பார்க்க இருக்கும் நடிகர் பாண்டியன்! எங்கள் மதுரை மண்ணின்மைந்தன்.!!

-விளம்பரம்-

திரைஉலகத்தில் நடிக்க ஆண்டாண்டு காலமாக இப்போதுவரை வாய்ப்புக்காக சொந்த ஊரை விட்டு சென்னைக்கு வந்து படாதபாடுபடும் இளைஞர்கள் ஏராளம். ஆனால் தேடாமல் தானாக தேடி வந்த வாய்ப்பு லட்சத்தில் சிலபேருக்குதான் வரும். அதில் நம் பாண்டியனை அப்படித்தான் தேடி வந்தது. சினிமா என்றால் பார்ப்பதை தவிர அதைப்பற்றி வேறு எதுவும் தெரியாத_ தான்உண்டு..

- Advertisement -

மீனாட்சி அம்மன் கோவில் புதுமண்டபத்தில் இருந்த தன் வளையல் கடை உண்டு என கடை வியாபாரத்தில் பிசியாக இருந்த இளைஞன்தான் பாண்டியன்.1983ம் வருடம் பாரதிராஜா மண்வாசனை என்ற படத்தை கதாநாயகன் இல்லாமலேயே ஏதோ ஒரு நம்பிக்கையில் கதாநாயகி ரேவதியை மலையாள கரையோரம் கண்டுபிடித்து மதுரைக்கு படப்பிடிப்புக்கும் வந்துவிட்டார். நேரம் அல்லது யோகம் பாண்டியனுக்கு ஆரம்பித்தது அப்போதுதான்.!

ஷூட்டிங் ஆரம்பித்து நடந்துகொண்டிருந்தது. பாரதிராஜாவின் கண்ணில் வளையல்கடையில் இருந்த பாண்டியன் விழ தனது கதாநாயகன் இங்கே இருக்கிறான் என ஒரே அமுக்காக அமுக்கி மண்வாசனை நாயகனாக்கினார். அங்கே தொடங்கியது பாண்டியனின் ராஜ்யம். மண்வாசனையின் பிரம்மாண்ட வெற்றி அவரை தொடர்ந்து பத்து வருடம் திணறாமல் ஓட வைத்தது. வரிசையாக ‘நேரம் நல்லநேரம் மனைவி சொல்லே மந்திரம் பொண்ணு புடிச்சிருக்கு மண்ணுக்கேத்த பொண்ணு புதுமைப்பெண் சிறை நான் பாடும்பாடல் வாழ்க்கை மண்சோறு ஆண்பாவம் திருமதி ஒரு வெகுமதி முதல்வசந்தம் ஆண்களை நம்பாதே என படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன.

-விளம்பரம்-

பின்னர் நிறைய புதுநாயகர்களின் வருகை காரணமாக குணச்சித்திர வேடங்களுக்கு மாறினார். குருசிஷ்யன் ஊர்க்காவலன் சகலகலா சம்பந்தி நாடோடிதென்றல் என நடித்தாலும் படவாய்ப்புகள் குறைந்துகொண்டே வந்தது. கிழக்குசீமையிலே படத்தின் வெற்றியால் பாண்டியன் திரும்ப ஒரு ரவுன்ட் வருவார் என எதிர்பார்த்தனர். ஏனோ அது நடக்கவில்லை. கடைசியாக சிட்டிசன் படத்தில் அஜித்துடன் நடித்தார். அதன்பிறகு சில சீரியல்களில் தலைகாட்டினார்.

கவனம் அரசியல் பக்கம் திரும்பியது. அரசியலில் கூடா நட்பு குடிகாரராக மாற்றியது. முழுநேர குடிக்கு அடிமையானார். மஞ்சள்காமாலையால் 2008ல் தனது 49 வயதில் மரணமடைந்தார் பாண்டியன். அடுத்த நொடி ரகசியங்கள் நிறைந்ததுதான் வாழ்க்கை. அது பாண்டியன் விசயத்தில் நடந்தது. யாருக்கும் தெரியாமல் ஒரு வளையல்கடையில் இருந்தவரை உலகறிய செய்து பேரையும் புகழையும் கொடுத்த காலம் கூடாநட்பையும் கொடுத்து உயிரை எடுத்துக்கொண்டதுதான் சோகம். இதுதான் நேரம் அல்லது யோகத்தின் விளையாட்டு.

Advertisement