தேசிய விருதுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது – தேசிய விருதுகள் அறிவிப்பிற்கு பின் பார்த்திபன் வெளியிட்ட ஆடியோ.

0
935
- Advertisement -

இன்று 69 வது தேசிய திரைப்பட விருதினை பல்வேறு திரைப்படங்களுக்கும் சிறந்த நடிகர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ‘இரவின் நிழல்’ படத்தில் ‘மாயாவி’ பாடலுக்காக ஸ்ரேயா கோஷல் அவருக்கு அந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது குறித்தும் ஸ்ரேயா கோஷல் மற்றும் இசையமைப்பாளர் AR ரகுமான் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் அவரது வாழ்த்து பதிவு ஒன்றரை வெளியிட்டுள்ளார்.

-விளம்பரம்-

இரவின் நிழல்  

தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான முறையில் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர் நடிகர் பார்த்திபன். அந்த வகையில் தற்போது பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் இரவின் இயக்கத்தில் இந்த படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு உள்ளது. இதில் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருக்கின்றனர். இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்து இருக்கிறார். மேலும், இந்த படத்தை இயக்குவது மட்டுமில்லாமல் பார்த்திபன் நடித்தும் இருக்கிறார்.

- Advertisement -

அதுமட்டும் இல்லாமல் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘விக்டோரியா’ என்னும் ஜெர்மானிய திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு இருந்தது. அது ஆஸ்கர் விருதின் இறுதி பட்டியல் வரை சென்றிருந்தது. தற்போது பார்த்திபனும் அந்த முயற்சியில் இறங்கி இருக்கிறார். அகிரா புரோடக்சன் இந்த படத்தை தயாரித்துள்ளது 2022 ஆம் ஆண்டு ஜூலை 15 அன்று வெளியானது. இந்த திரைப்படத்திற்கு அவர் ஆஸ்கர் விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் ஆனால் அது அவருக்கு கிடைக்கவில்லை.  

ஆஸ்கர் பற்றி பார்த்திபன் போட்ட பதிவு

ஆஸ்கர் விருதுக்கு தேர்வான 10 இந்திய படங்களுள் ஒன்று தான் இரவின் நிழல் திரைப்படம். அப்போது விருது அறிவிக்க படுவதற்கு முன்பே எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி மிக பெரிய வரவேற்ப்பை பெற்ற RRR திரைபடத்திற்கு தான் அந்த விருது கிடைக்கும் என அந்த RRR அணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஆஸ்கர் விருது குறித்து அரசியல் பேசும் விதமாகவும் அவர் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

-விளம்பரம்-

இது கூறித்து அவர் கூறுகையில் “Oscars eligible list-ல் மட்டுமே‘இரவின் நிழல்’ இருக்கிறது. ஆனால், RRR – Oscars short list-லேயே இருக்கிறது.வெற்றி வாய்ப்பும் வெளிச்சமாகவே இருப்பது நமக்கெல்லாம் பெருமையே! என்று கூறினார்.

தேசிய விருது குறித்து அவர் கூறியது.

அவர் கூறுகையில் “நிலவில் சந்திராயன் இறங்கும்போது. இஸ்ரோவில் உள்ள விஞ்ஞானிகள் மட்டுமல்ல அந்த கட்டிடத்தில் உள்ள. பணிபுரியும் அனைவரின் மகிழ்ந்து  இருப்பார்கள். அப்படி பெருமைக்குரிய  தேசிய விருது இரவின் நிழல் படத்திற்கு. ஸ்ரேயா கோஷல் அவர்கள் பாடிய மாயவத் தூயவா  பாட்டிற்கு தேசிய விருது அறிவித்தபோது முழு முதல் காரணமான விஞ்ஞான இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் அவருக்கு எனது மனப்பூர்வமான நன்றி. இஸ்ரோவில் பணிபுரிந்த நிறைய ஊழியர்களில் ஒருவர் போல அந்தப் படத்திற்காக உழைத்த ஊழியர்களில் ஒருவராக நானும் மகிழ்கிறேன் பெருமை கொள்கிறேன்.

ரகுமான் சாரிடம் நான் ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என்பது நீண்ட நாள்  எதிர்பார்ப்பு அதன் பலனாக இன்று இரவின் நிழல் படத்திற்கு கிடைத்த மரியாதைகள் கிட்டத்தட்ட 120 இன்டர்நேஷனல் அவார்டுகள் கிடைத்தால் கூட  நம் தேசிய விருது அதைப்பற்றி எனக்கு பெரிதும் எதிர்பார்ப்பு இருந்தது. அதில் அந்தப் படத்தில் என்னுடைய பெயர் இருப்பது மகிழ்ச்சி அதற்குக் காரணமான ரகுமான் அவர்களுக்கும் ஸ்ரேயா கோஷல் அவர்களுக்கும் படத்தில் பணி புரிந்த அத்தனை தொழில் நுட்பகலைஞர்களுக்கும் என்னுடைய மனப்பூர்வமான நன்றி.” என்று கூறியிருந்தார்.    

Advertisement