அவர் இப்போ மார்ஸ் ஜூபிட்டர்ல கடை திருந்துட்டாரு – சந்திராயன் ட்வீட் சர்ச்சை குறித்து மீண்டும் பிரகாஷ் ராஜ் பதிவு.

0
811
- Advertisement -

தன்னை குறித்து நெட்டிசன்கள் விமர்சித்த பதிவிற்கு பிரகாஷ்ராஜ் கொடுத்திருக்கும் பதில் ட்விட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக கொடி கட்டி பறப்பவர் பிரகாஷ்ராஜ். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தொலைக்காட்சி தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவர் தனது நடிப்பால் குறுகிய நாட்களிலேயே ரசிகர்களை தன் வசம் ஈர்த்தார்.

-விளம்பரம்-

பெரும்பாலும் பிரகாஷ் ராஜ் அவர்கள் வில்லன் கதாபாத்திரத்தில் தான் கலக்கி இருக்கிறார். இப்படி இவர் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வந்தாலும் அரசியலிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். மேலும், இவர் சமீப காலமாகவே பாஜக அரசுக்கு எதிரான கருத்துக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். இது குறித்து பல சர்ச்சைகள் எழுப்பி இருக்கிறது. இந்த நிலையில் சந்திரயான்-3 விண்கலம் குறித்து பிரகாஷ் ராஜ் டீவ்ட் ஒன்று போட்டு இருந்தார்.

- Advertisement -

பிரகாஷ் ராஜ் டீவ்ட் :

அதில் அவர், டீ ஆத்துவதுபோல் ஒருபடத்தை பதிவிட்டு, ”விக்ரம் லேண்டர் நிலவில் இருந்து எடுத்த முதல் படம்” என்று கூறி இருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் கொந்தளித்து போய் கடுமையாக பிரகாஷ்ராஜை விமர்சித்து வருகிறார்கள். அதில் சிலர், அரசியலுக்கும், நாட்டிற்கும் இடையிலான எல்லையை தெரிந்து கொள்ளுங்கள், ஒருவரை வெறுப்பதற்கும், நாட்டை வெறுப்பதற்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. என்றும், அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள்.

கொந்தளிப்பில் நெட்டிசன்கள்:

இது தொடர்பாக சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் நெட்டிசன்களுக்கு பதில் கொடுக்கும் வகையில் பிரகாஷ்ராஜ் பதிவு போட்டு இருக்கிறார். அதில் அவர்,
வெறுப்பு எப்போதும் வெறுப்பை மட்டுமே காணும். ஆர்ம்ஸ்ட்ராங் காலத்து ஜோக் ஒன்றை சுட்டிக்காட்டியே நான் பதிவிட்டிருந்தேன். கேரள தேநீர் விற்பனையாளர்களை பகடி செய்யும் நகைச்சுவை அது. உங்களுக்கு ஒரு நகைச்சுவையைக் கூட ரசிக்க முடியவில்லை என்றால் கொஞ்சம் வளருங்கள் என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

பிரகாஷ்ராஜ் கொடுத்த பதில்:

இதனை அடுத்த டீவ்ட்டர் பக்கத்தில், மலையாளி டீ கடைக்காரருக்கு என்ன நடந்தது என இன்னுமே நகைச்சுவையை புரிந்துகொள்ளாமல் கேட்கும் ட்ரோலர்களே… அவர் உங்களைப் போல அல்ல. அவர் மிகவும் புத்திசாலி. அவர் தனது கிளைகளை செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கு விரிவுபடுத்தியுள்ளார். புளூட்டோவிலும் விரைவில் கடையை திறக்க உள்ளார். உங்களால் முடிந்தால் அவரை பிடித்துகொள்ளுங்கள் என்று கூறி இருக்கிறார்.

சந்திராயன் 3 விண்கலம் குறித்த டீவ்ட்:

இதனை அடுத்து நிலவின் தென் துருவத்தில் சந்திராயன் 3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கப்பட்டது குறித்து அவர் மீண்டும் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், இந்தியாவுக்கும் மனித குலத்துக்கும் பெருமையான தருணம். நன்றி இஸ்ரோ. சந்திரயான் 3 திட்டத்தில் பங்களித்த அனைவருக்கும் நன்றி. இது நமது பிரபஞ்சத்தின் மர்மத்தை ஆராய்வதற்கும் கொண்டாடுவதற்கும் நமக்கு வழிகாட்டட்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Advertisement