விஜய் சாரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். குருவி படத்தை கிண்டல் செய்த நடிகர் பவன் பேட்டி.

0
40991
pawan

சமீபத்தில் அசுரன் படத்தின் 100வது நாள் வெற்றி விழாவில் பேசிய நடிகர் பவர் குருவி படத்தின் 150 நாள் வெற்றி விழா குறித்து கிண்டல் செய்து பேசியது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆடுகளம், வடசென்னை ஆகிய படங்களுக்கு அடுத்து தனுஷ்– வெற்றிமாறன் இணைந்து உருவாக்கிய படம் தான் “அசுரன்”. சமீபத்தில் தான் தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன் ‘ திரைப்படம் அமோக வெற்றி பெற்றது.

கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து உள்ளது. மேலும், இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் ஜி.வி. பிரகாஷ் அவர்கள் இசையில் வெளிவந்தது. இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து உள்ளது. அதுமட்டுமில்லாமல் தனுஷ் நடிப்பில் வெளி வந்த படத்திலேயே இந்தப் படம் தான் அதிக வசூல் செய்தது. இந்நிலையில் இந்த படத்தின் 100-வது நாள் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழா சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்றது.

இதையும் பாருங்க :பொங்கல் முன்னிட்டு தளபதி ரசிகர்களுக்கு நாளை செம ட்ரீட். மாஸ்டர் படத்தின் மாஸ் அப்டேட்.

- Advertisement -

இந்த விழாவில் நடிகர் தனுஷ், வெற்றி மாறன், படக்குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டார்கள். இந்த விழாவில் பேசிய பவன், பேசியது, அசுரன் படத்தில் நான் நடித்தது மிகவும் பெருமையாக உள்ளது. பொதுவாகவே திரைப் படங்கள் நூறு நாட்கள் தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக ஓடுவது என்பது அரிதான ஒன்று. கடைசியாக நான் நடித்த குருவி திரைப்படம் 150 நாட்கள் ஓடியது என்று வெற்றி விழாவிற்கு நான் சென்றிருந்தேன். ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என்று எனக்கு தெரியவில்லை என்று கூறினார். இவருடைய பேச்சை கேட்டு அரங்கமே சிரிப்பொலியில் சிரிக்க ஆரம்பித்தது.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவ நடிகர் பவனுக்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள நடிகர் பவன் குருவி படம் குறித்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். அதில், நான் விஜய் சாரிடமும், கம்பெனியிடமும், இயக்குனரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் இதை யாரும் புண்படும் விதமாக பேசவில்லை. நான் பொதுவாக நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டேன், அப்படி போனாலும் என்னை ஸ்டேஜூக்கு கூப்பிடாதீர்கள் என்று சொல்லிடுவேன், நான் தெரியாமல் பேசிவிடுவேன் என்று கூறியுள்ளார் பவன்.

-விளம்பரம்-
Advertisement