பிரபல இசையமைப்பாளரால் கிடப்பில் இருக்கும் பிக் பாஸ் ஐஸ்வர்யா படம்..!இயக்குனர் தற்கொலை முயற்சி..!

0
241
Aniruth

இந்தாண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமடைந்த ஐஸ்வர்யா தாத்தா, ஏற்கனவே ‘தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும்’ என்ற படத்தின் மூலம் நடித்திருந்தலும் அந்த படத்திற்கு பின்னர் வேறு எந்த பட வாய்ப்பும் இல்லாமல் இருந்து வந்தார்.

ayswarya

ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்த ஐஸ்வர்யா தாத்தாவிற்கு கடவுள் புண்ணியத்தில் புதிய படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த படமும் தற்போது இசையமைப்பாளர் அனிருத்தால் கிடப்பில் இருந்து வருகிறது.

ஐஸ்வர்யா தத்தா, புதுமுக இயக்குனர் பொன்முடி இயக்கத்தில் ‘சோமபான ரூபசுந்தரம்’ என்ற படத்தில் நடித்து வந்துள்ளார்.பொன்முடி ஏற்கனேவே ’பையா’, ‘பீச்சாங்கை’ போன்ற படங்களில் வில்லன் நடிகராக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் இயக்கி வந்த [இடத்திற்கு இசையமைப்பாளர் அனிருத்தை வைத்து ஒரு பாடலை பாடவைத்து, அந்த ஒரு பாடலை வைத்தே படத்திற்கு பிரமோஷன் செய்து விடலாம் என்று ஏணியுள்ளார்.

Ponmudi

ஆனால், தற்போது பெரிய ஹீரோக்கள் படங்களில் படு பிஸியாக இருந்து வரும் அனிருத்,‘சோமபான ரூபசுந்தரம்’ படத்தில் படுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அனிருத்தை நம்பியே இந்த படத்தை எடுத்த பொன்முடி 80 சதவிகிதம் முடிந்த படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டார். முதல் படமே முக்கால் படமாக நின்றதால் மனம் வெறுத்துப்போன இயக்குனர் பொன்முடி ஏகப்பட்ட தூக்கமாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயல, தகவல் அறிந்த நண்பர்கள் அவரை மருத்துவமனை தூக்கிச்சென்று காப்பாற்றியிருக்கிறார்கள்.