பிரதமர் மோடியை ஒருமையில் பேசி விமர்சித்த பிரகாஷ் ராஜ் – குவியும் கண்டனங்கள்

0
68
- Advertisement -

பிரதமர் மோடியை பிரகாஷ் ராஜ் ஒருமையில் பேசி விமர்சித்து இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பிரதமர் மோடி அவர்கள் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மூன்று நாள் பயணமாக வருகை தந்திருக்கிறார். இது இவருடைய தனிப்பட்ட பயணம் என்று கூறியிருந்தார். அந்த வகையில் நேற்று ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வருகை தந்திருந்தார்.

-விளம்பரம்-

அதன் பின் இவர் கடற்கரையில் இருக்கும் பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு அதனுடைய கட்டிடக்கலை எல்லாம் கண்டு ரசித்திருக்கிறார். அதற்குப் பிறகு இவர் கடலின் நடுவே இருக்கும் விவேகானந்தர் பாறைக்கு படகின் மூலம் சென்றிருந்தார். அங்கு விவேகானந்தர் பாறையை சுற்றிப் பார்த்துவிட்டு தியான மண்டபத்தில் தியானம் செய்திருந்தார் மோடி. இன்று மதியம் மூன்று மணி வரை இவர் தியானம் மண்டபத்தில் தியானம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

தியானத்தில் மோடி:

மேலும், மோடியின் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் போலீஸ் பாதுகாப்பு பலமாக போடப்பட்டிருந்தது. இது தொடர்பாக அவரின் புகைப்படம், வீடியோக்களை எல்லாம் இணையத்தில் வெளியாகியிருந்தது.இதற்கு சிலர் விமர்சித்தாலும் சிலர் வரவேற்று இருக்கிறார்கள். இது குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில், நௌதாங்கி…மெடிடேஷனா? அல்லது மீடியா அடென்ஸனா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

மோடி-பிரகாஷ்ராஜ் குறித்த சர்ச்சை:

இதை அடுத்து பிரகாஷ்ராஜ் மோடியை ஒருமையில் விமர்சித்து பேசியிருந்தார். இதற்கு பாஜக உறுப்பினர்கள் பலருமே கண்டனம் தெரிவித்து இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் மீண்டும் ஒருமையில் மோடியை விமர்சித்து பிரகாஷ்ராஜ் பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சமீபத்தில் முன்னாள் பிரதமர் நேருவின் 60-வது நினைவு தினம் புதுச்சேரியில் கொண்டாடப்பட்டது.

-விளம்பரம்-

விழாவில் பிரகாஷ்ராஜ் பேசியது:

இதில் பிரகாஷ்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருந்தார். அப்போது விழாவில் அவர்,
அது ஒரு அரசியல்வாதி தீர்க்கும் பிரச்சினை இல்ல, அதுக்கு படித்தவன் வேண்டும். அதை விட்டுட்டு எங்கேயோ தியானம் பண்ண போய் உட்கார்ந்து இருக்கான். தியானம் பண்றவன் எவனாவது சோசியல் மீடியாவில் மெசேஜ் போடுவானா? தியானம் பண்றதுக்கு முன்னாடி தன்னை சுத்தி கேமரா வச்சு போட்டோ எடுக்க சொல்வானா? மோடிக்கு முன்னாடி நிறைய ஊதுபத்தி ஏத்தி வச்சிருக்காங்க.

மோடி குறித்து சொன்னது:

அந்த ஊதுபத்தி வாசனையில் உட்கார்ந்து தியானம் பண்ண முடியுமா? எதுக்கு இந்த நாடகம். காவிரி பிரச்சனை, ஒரிசாவில் தமிழர்கள் பிரச்சனை, சீனாக்காரன் நம்ம நாட்டு இடத்தை ஆக்கிரமிக்கிறது என்று பல பிரச்சினை இருக்கு. அதை விட்டு தியானம் பண்றது ஒரு வேலையா என்று ஓரிமையில் மோசமாக பேசி விமர்சித்திருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement