ராதிகாவை எப்படி நான் அம்மானு கூப்புடுவேன், அவர எப்படி நான் அப்படி கூப்பிட முடியும் – படு ஒப்பானக பேசிய வரலக்ஷ்மி.

0
1220
varalakshmi
- Advertisement -

ராதிகா என்னுடைய அம்மா இல்லை என்று சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலக்ஷ்மி சரத்குமார் பேசியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 80, 90 காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வந்தவர் நடிகை ராதிகா சரத்குமார். தமிழில் இயக்கத்தில் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த கிழக்கே போகும் ரயில் எனும் படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார் நடிகை ராதிகா. இதனை தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து உள்ளார்.தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த் தொடங்கி விஜய்,சூர்யா, விஷால்,விஜய் சேதுபதி என தற்போது இருக்கும் முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இவர் சினிமாவை தாண்டி சின்னத்திரையிலும் ஒரு கலக்கு கலக்குகிறார். இவர் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகரான சரத்குமார் அவர்களை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ராதிகாவிற்கு ரேயன் என்ற மகல் இருக்கிறார். இவர் ராதிகாவின் முன்னாள் கணவர் ரிச்சர்ட் என்பருக்கு பிறந்த மகள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல இவர்களுக்கு ராகுல் என்ற மகனும் இருக்கிறார்கள். இவர்கள் தான் நடிகர் சரத் குமாருக்கு ராதிகவிற்கும் பிறந்தமகன் ஆவார்.

- Advertisement -

வரலக்ஷ்மியின் அம்மா :

ஆனால், நடிகை வரலட்சமியின் தாய் வேறு . நடிகர் சரத் குமாருக்கு நடிகை ராதிகா இரண்டாவது மனைவி தான். அவர் ஏற்கனவே 1985 ஆம் ஆண்டு சயா என்பவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.திருமணத்திற்கு பின் நடிகர் சரத்குமாருக்கும், சயாவிற்கும் இரண்டு மகள்கள் பிறந்தனர். அதில் பூஜாவிற்கு அடுத்து பிறந்த மகள் தான் வரலட்சமி. வரலட்சுமி பிறந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் சரத் குமார் சயாவை விவாகரத்து செய்து விட்டார்.

அதன் பின்னர் 2001 ஆம் ஆண்டு தான் நடிகை ராதிகாவை திருமணம் செய்துகொண்டார். இருப்பினும் நடிகை வரலட்சுமி தனது அம்மாவை பிரியவில்லை. இப்படி இவர்கள் குடும்பத்தில் பல சர்ச்சைகள் இருப்பதால் அடிக்கடி சமூக வலைதளத்தில் இவர்களின் குடும்பத்தை பற்றி அடிக்கடி பலர் விமர்சித்தும் இருகின்றனர். இதை குறிப்பிட்டு ராதிகாவின் மகன் ரேயன் பல முறை மனக்கஷ்டத்துடன் பதிவிட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

ராதிகா குறித்து வரலக்ஷ்மி :

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலக்ஷ்மி சரத்குமாரிடம், தொகுப்பாளர் சோசியல் மீடியாவில் உங்கள் குடும்பத்தை குறித்து ரொம்ப கஷ்டமான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள் இது குறித்து சொல்லுங்கள் என்று கேட்டார். அதற்கு வரலக்ஷ்மி கூறியது, மக்கள் பல கருத்துக்களை சொல்லி கொண்டு தான் இருப்பார்கள். என்னை நிறைய பேர் எப்படி நீங்கள் ராதிகாவை ஆன்ட்டி என்று கூப்பிடுவீர்கள்? என்று கேட்டார்கள். ராதிகா ஒன்னும் என்னுடைய தாய் கிடையாது. அவர்கள் என்னுடைய அப்பாவின் இரண்டாவது மனைவி.

அவர் எனக்கு ஆண்டி தான் :

தாய் என்றால் அது ஒருவர் மட்டும் தான். அனைவருக்குமே ஒரே ஒரு தாய் மட்டும் தான். அதனால் ராதிகா அவர்கள் என்னுடைய அம்மா கிடையாது. அவர் எனக்கு ஆண்டி தான். அவர்களுக்கு என்னுடைய தந்தை சரத்குமார் அவர்களுக்கு இணையாக மரியாதை கொடுத்து வருகிறேன். ஒரு அப்பாவாக சரத்குமார் அவர்களும் தன்னுடைய கடமையை செய்து உள்ளார். ஒரு சில பேருக்கு வேலை வெட்டியே இல்ல. அவங்க வேலையே இந்த மாதிரி குழைப்பது தான். அவங்களுக்கு வேற வேலை வெட்டி இருந்திருந்தா இதெல்லாம் எதுக்கு பண்றாங்க என்று அதிரடியாக கூறினார்.

Advertisement