வெள்ளத்தில் மூழ்கிய முன்னணி நடிகரின் வீடு.! காப்பாற்றிய மக்கள்.!

0
219

கேரளாவில் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி ஆரம்பித்த மழை, விடாமல் பல நாள்கள் பெய்ததால், மத்திய – வட கேரளப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்து வருகிறது. அணைகள் அனைத்தும் நிரம்பியதால், 22 அணைகள் திறக்கப்பட்டன. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவருகிறது.

Prithivraj

26 ஆண்டுகளுக்குப் பிறகு, முழுக் கொள்ளளவை எட்டிய இடுக்கி அணை திறக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி இன்று(ஆகஸ்ட் 16) காலை நிலவரப்படி 11 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. வெள்ள பெருக்கில் சிக்கி இதுவரை 70 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு திரைப்பட கலைஞர்களும் , பொது மக்களும் தங்களால் முடிந்த நிதியுதிவியை செய்து வருகின்றனர். இந்நிலையில் கேரளாவில் ஏற்பட்டுள்ள கன மழை காரணமாக பிரபல கேரள நடிகர் ப்ரிதிவ்ராஜ் வீடும் மழை நீரால் மூழ்கடிக்கப்பட்டது.

Prithivraj momo

Prithvi

Prithviraj

இன்று காலை திருவனந்தபுரத்தில் உள்ள நடிகர் பிரிதிவிராஜின் வீடு மழை வெள்ளம் சூழ்ந்து முற்றிலும் மூழ்கியது. அங்கிருந்த சிலர் பிரிதிவிராஜ் மற்றும் அவரது குடும்பத்தினரையும் பத்திரமாக மீட்டுள்ளனர். மழை எச்சரிக்கையால் கேரளாவை சுற்றியுள்ள பகுதிகளில் சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.