அமலா பாலை தொடர்ந்து சொகுசு கார் சர்ச்சையில் சிக்கிய மலையாள நடிகர் பிரிதிவிராஜ்.

0
1646
pritivi-raj

சினிமா துறையில் பிரபலமானவர்கள்,அரசியல்வாதிகள்,தொழிலதிபர்கள் என அனைவரும் விலை உயர்ந்த சொகுசு கார்களை வாங்குவதில் பிரியம் உள்ளவர்களாக இருப்பார்கள். இது நடைமுறையில் வழக்கமான ஒன்று. அந்த வகையில் சமீபத்தில் நடிகை அமலா வாங்கிய கார் குறித்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சை எழுந்தது. தமிழ் சினிமா திரை உலகில் சர்ச்சைக்குரிய நாயகி என்று சொன்னால் நடிகை அமலா பாலை சொல்லலாம். ஏன்னா சமீபகாலமாகவே அந்த அளவிற்கு சோசியல் மீடியாவில் நடிகை அமலா பால் குறித்து பல விமர்சனங்கள் வந்து கொண்டு உள்ளது. அதிலும்,சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த “ஆடை” திரைப்படம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால்,நடிகை அமலா பால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

Image result for prithviraj"

மேலும், அமலா குறித்து பல சர்ச்சைகள் சமூக வலைத்தளங்களில் எழுந்த வண்ணம் தான் உள்ளன. இந்நிலையில் நடிகை அமலா பால் பல கோடி கொடுத்து வாங்கிய மெர்சிடிஸ் சொகுசு கார் குறித்து பல தகவல்கள் இணையங்களில் பரவியது. இதனைத்தொடர்ந்து நடிகை அமலா பால் அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள காரை வாங்கியுள்ளார். மேலும்,அந்த காரிற்கு 20 லட்சம் ரூபாய் வரி கட்ட வேண்டும். ஆனால்,நடிகை அமலா பால் அவர்கள் வரி கட்ட தவறி உள்ளார் என்று தெரிய வந்து உள்ளது. மேலும், அந்த காரை அமலா பால் விற்றதாகவும் செய்திகள் வந்தது. இதனை தொடர்ந்து தற்போது நடிகர் பிரித்திவிராஜ் அவர்களும் விலை உயர்ந்த லம்போர்கினி சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

இதையும் பாருங்க : இனி இந்திராவும், சக்தியும் இவங்க தான். ஆயுத எழுத்து சீரியலில் மாற்றம்.

- Advertisement -

பிரித்விராஜ் அவர்கள் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.மேலும், நடிகர் பிரித்திவிராஜ் அவர்கள் அதற்காக செலுத்த வேண்டிய முழு வரியையும் கேரளாவில் செலுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் பிரித்திவிராஜ் அவர்கள் 1.64 கோடி ரூபாய் மதிப்பில் சொகுசு கார் ஒன்றை வாங்கி உள்ளார். மேலும்,அவர் அந்த கரை பதிவு செய்வதற்காக கொச்சி மோட்டார் போக்குவரத்து துறையில் ஆன்லைனில் பதிவு செய்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் ஆன்லைன் பதிவில் நடிகர் பிரித்திவிராஜ் அவர்கள் காரின் விலையை 1.34 கோடி ரூபாய் தான் என குறிப்பிடப்பட்டுள்ளார்.

Image result for prithviraj car"

ஆனால், அந்த காரின் உண்மையான விலையோ 1.64 கோடி ரூபாய் என்பது மோட்டார் போக்குவரத்து அதிகாரிக்களுக்கு தெரிய வந்து உள்ளது. இதனை தொடர்ந்து மோட்டார் போக்குவரத்து அதிகாரிக்கள் நடிகர் பிரித்விராஜ் இன் சொகுசு காரை பதிவு செய்ய மறுத்தார்கள். மேலும், அந்த சொகுசு காரின் உண்மையான விலையை பிரித்விராஜ் அவர்கள் கூறவில்லை என்றும், உண்மையான விலையை கூறாமல் பொய்யாக ஒரு மதிப்பை கூறியிருப்பதால் நடிகர் பிரித்விராஜ் மீது நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல் தெரிய வந்து உள்ளது.

-விளம்பரம்-
Advertisement