இனி இந்திராவும், சக்தியும் இவங்க தான். ஆயுத எழுத்து சீரியலில் மாற்றம்.

0
27674
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கும் சீரியல் தான் “ஆயுத எழுத்து”. மேலும்,இந்த சீரியலில் நடிக்கும் ஹீரோ,ஹீரோயின் இருவருமே சீரியலை விட்டு விலகி இருக்கிறார்கள். இது குறித்த சமூக வலைத்தளங்களில் பல கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன. கடந்த 2012 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘7சி’ என்ற சீரியலின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரீத்து. அதற்குப் பிறகு இவர் ஜீ தமிழ், விஜய் டிவி என மாறி மாறி சீரியல்களில் நடித்து வந்திருந்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆயுத எழுத்து சீரியலில் ஹீரோயினாக நடித்து வந்தார். இந்த சீரியல் கிராமத்து பின்னணியில் உருவாகி வந்த கதையாகும். மேலும், இந்த சீரியலில் ஸ்ரீத்து அவர்கள் பெண் தாதாவின் மகனுடன் காதல் வயப்பட்தும்,நேர்மையான சப் கலெக்டராகவும் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
Image result for ayutha ezhuthu serial"

திடீரென்று ஸ்ரீத்து தற்போது இந்த சீரியலை விட்டு விலகியிருக்கிறார். இதனால் ரசிகர்கள் மத்தியில் சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதனைத் தொடர்ந்து பார்க்கையில் ஸ்ரீத்து வைத்து சமூக வலைத்தளங்களில் பல மீம்ஸ்களை வெளியிட்டு வந்தார்கள். அதாவது விஜய் டிவியில் படிச்சு,விஜய் டிவிக்கே கலெக்டர் ஆயிட்டாங்க நம்ம ஸ்ரீத்து என்று பல மீமிஸ்கள் இணையங்களில் வந்தது. மேலும், ஆயுத எழுத்து சீரியல் குறித்து பல விவகாரம் சமூக வலைதளங்களில் போட்டு வந்தவர்கள். இதனைத் தொடர்ந்து இந்த சீரியலில் ஹீரோ ஹீரோயினாக நடிக்கும் அம்ஜித்,ஸ்ரீத்து ஜோடி இருவருமே திடீரென விலகி விட்டார்கள். அவர்களுக்கு பதிலாக தற்போது சரண்யா சுந்தராஜ் மற்றும் ஆனந்த், இந்திரா மற்றும் சக்திவேல் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இதையும் பாருங்க : புகைப்படத்தில் இருக்கும் இந்த சூப்பர் ஸ்டார் நடிகைய தெரியுதா பாருங்க

- Advertisement -

ஆயுத எழுத்து சீரியல் ஒளிபரப்பாகி நான்கு மாதங்கள் கூட முடியவில்லை. திடீரென்று இந்த ஜோடிகள் வெளியேற்ற காரணம் என்ன என பல கேள்விகள் எழுந்தன. அதிலும் குறிப்பாக அவர்கள் போட்ட மீமிஸ் தான் காரணம் என்றும் தெரியவந்துள்ளது. அவருடைய நடிப்பும் அழகும் , சீரியலில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ரசிகர்கள் ‘எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என கூறி அட அந்த புள்ள’ தான் என்று கண்டுபிடித்துவிட்டார்கள். பின் சும்மா விடுவார்களா! சோசியல் மீடியாக்களில் மீம்ஸ் போட்டு இருந்தாங்க. இதுகுறித்து ஸ்ரீத்துவும் கூறியது, நானும் பார்த்தேன். ரசிகர்கள் என்னை மறக்காமல் இருக்கிறார்கள் என்று நினைக்க எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும் என கூறியிருந்தார். ஆனால், திடீரென்று ஸ்ரீத்து வெளியானது குறித்து ரசிகர்கள் மத்தியில் சோகம் நிலவியது.

இதுகுறித்து சீரியல் ஹீரோ கூறியது, சினிமா மற்றும் சில வெப்ஸ்களில் கமிட்டாகி இருக்கும் காரணத்தினால் தான் என்னால் நடிக்க முடியவில்லை என்று கூறினார். மேலும், ஸ்ரீத்துவிடம் கேட்டபோது, அவர் “எல்லாம் நன்மைக்கே என்ற ஒரு வார்த்தையை தான் உங்கள் கேள்விக்கான பதில் என்னால் சொல்ல முடியும். மற்றபடி எல்லாம் நடக்கிறது எல்லாம் விவரமாக போகப் போக தானாகவே எல்லாருக்கும் தெரிய வரும்” என்று நினைக்கிறேன் என சுருக்கமாக அவருடைய பதிலை முடித்துக் கொண்டார். மேலும் ஸ்ரீத்துவின் இந்த அதிரடி முடிவு குறித்து அவருடைய நெருக்கமான நண்பர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியது, ஹீரோ, ஹீரோயின், இயக்குனர், தயாரிப்பாளர்கள் எல்லாருமே சீரியலில் இருந்து மாறுவது புதுசல்ல வழக்கமான ஒன்று. ஆனால், ஒருத்தர் விலகி இன்னொருத்தர் வரப்போகிற தருணத்தில் பில்டப் கொடுப்பது தான் கொஞ்சம் ஓவராக இருக்கு.

-விளம்பரம்-
Image result for ayutha ezhuthu serial"
ஆயுத எழுத்தின் புதிய ஜோடிகள்

அத விட்டுட்டு ஆளே மாறிட்டங்கனு, இப்ப ரொம்ப அழகா இருக்கு, துருதுருன்னு இருக்கான்னு டயலாக் பேசுவது கொஞ்சம் கஷ்டமான விஷயம். இதெல்லாம் தான் நல்லா இல்லை என்று கூறினார். இது மூலமாக அவங்க நண்பர்கள் சொல்வது நாம் பழைய நடிகர்களை கேலி ,கிண்டல் செய்வது கொஞ்சம் நிறுத்துங்கள். ஆய்த எழுத்துக்கும் அதே மாதிரி தான் பண்ணிருக்காங்க. மேலும், ஸ்ரீத்துவின் பதில் புரியாத புதிராகவே உள்ளது. அவர் சினிமா துறையில் கமிட்டாகி இருப்பாரா? இல்லை இது போன்ற மீமிஸ்கள் காரணமாக விலகி இருப்பாரா? என்ற கேள்விகள் எழுந்த வண்ணம் தான் உள்ளன.

Advertisement