திருமணம் ஆகி குழந்தை உள்ள நிலையில் முன்னாள் காதலி குறித்து பேசியுள்ள பிரிதிவிராஜ்.

0
44655
pritivraj
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் பிரித்விராஜ். பிரித்விராஜ் அவர்கள் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் 2002 ஆம் ஆண்டு நந்தனம் என்ற மலையாள மொழி திரைப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். இவர் தமிழில் கனா கண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பாரிஜாதம், மொழி, கண்ணாமூச்சி ஏனடா, நினைத்தாலே இனிக்கும், ராவணன், காவியத் தலைவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். அதற்கு பிறகு இவருக்கு தமிழ் மொழியில் ஆளே காணம். இவர் மலையாள மொழியில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவர் இதுவரை 80க்கும் மேற்பட்ட திரைப் படங்களில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-
Image result for actor prithviraj family

- Advertisement -

மேலும், இவர் ஆகஸ்ட் சினிமா என்ற பெயரில் ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றார். சினிமா உலகில் எவ்வளவோ பிரபலங்கள் நிஜ வாழ்க்கையில் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். உதாரணத்திற்கு பாக்கியராஜ்- பூர்ணிமா, அஜித்- ஷாலினி, சூர்யா- ஜோதிகா என்று சொல்லலாம். அந்த வகையில் மோலிவுட்டில் மிகப் பிரபலமான ஜோடிகள் என்று சொன்னால் பிரிதிவிராஜ்–சுப்ரியாவை சொல்லலாம். பிரித்திவிராஜ் மற்றும் சுப்ரியா மேனன் இவர்கள் இருவருக்கும் 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி பாலக்காட்டில் திருமணம் நடை பெற்றது. இவர்களுக்கு 2014 ஆம் ஆண்டு ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்துள்ளது. அவள் பெயர் (alankrita) அலன்கிர்தா. இவர்கள் இருவரும் மிகச் சிறந்த ஜோடிகள் என்பதற்கு எந்த சந்தேகமும் கிடையாது.

இதையும் பாருங்க : அஜித்திற்கு விஜய் கொடுத்த சர்ப்ரைஸ். மேடையில் கூறிய விஜய்யின் தந்தை எஸ் ஏ சி.

மோலிவுட்டில் மிகவும் பிரபலமான ஜோடிகளில் இவர்களும் ஒருவர். இவர்களுடைய காதலுக்கு பஞ்சமே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு ஒருவரை ஒருவர் மிகவும் நேசித்து வருகிறார்கள். சமீபத்தில் நடந்த வானொலி நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ப்ரிதிவிராஜ் அவர்கள் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை வெளிப்படையாக கூறி உள்ளார். இது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அவர் கூறியது, நான் என்னுடைய மனைவி சுப்ரியாவை காதலிப்பதற்கு முன்னால் ஒருவரை காதலித்தேன். என் முன்னாள் காதலியின் பெயர் ஜூன்.

-விளம்பரம்-
Related image

நான் ஆஸ்திரேலியாவில் கல்லுரி படிப்பு படித்துக் கொண்டிருக்கும் போது எங்களுக்கு காதல் ஏற்பட்டது என்று வெளிப்படையாகக் கூறினார். இதை அவருடைய மனைவி சுப்ரியாவிடவும் சொல்லி இருக்கிறாராம். அதோடு இவர்கள் இருவருக்கும் எந்த ஒரு ஒளிவு மறைவு இல்லாமல் இருக்கிறோம் என்றும் கூறியிருக்கிறார். சுப்ரியா மேனன் அவர்கள் இந்திய தொலைக்காட்சியில் செய்தியாளராக வேலை செய்கிறார். திருமணத்திற்கு பிறகு தயாரிப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார். தற்போது நடிகர் பிரிதிவிராஜ் அவர்கள் அடுஜீவிதம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement