இனி யாருக்கும் அப்படி நடக்கக்கூடாது..! ரகுவரன் மரணத்தில் நடந்த சோகத்தை கூறிய ரோகினி

0
1352
raghuvaran

மறைந்த நடிகர் ரகுவரன் ஹீரோ,வில்லன்,குணச்சித்திர நடிகரேன பல வேடங்களில் நடித்துள்ளார். இவர் எந்த பாத்திரமாக நடித்தாலும் அதில் அவரது சிறந்த நடிப்பை வெளிப்படுத்த கூடிய ஒரு சிறந்த கலைஞசர். மேலும் தமிழில் முன்னணி நடிகர்களான கமலை தவிர்த்து மற்ற அணைத்து நடிகர்களுடனும் வில்லனாக நடித்து மிரட்டியுள்ளார்.

Actor raghuvaran

1980 களில் தொடங்கி 200 மேற்பட்ட படங்களில் நடித்த ரகுவரன் கடந்த 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் காலமானார். அவர் காலமான போது நடந்த ஒரு சங்கடமான சம்பவத்தை நடிகர் ரகுவரனின் மனைவி நடிகை ரோகினி சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில்”என்னுடைய கணவர் இறந்த போது பத்திரிகையாளர்கள் யாரும் வீட்டினுள் வந்து புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று கூறினேன். அவர்களும் அதற்கு சம்மதித்து சரி என்று ஒப்புக்கொண்டனர். அப்போது என்னுடைய மகனை அழைத்து வரும் போது அணைத்து பத்திரிகையாளர்களும் வீட்டின் உள்ளே புகுந்து விட்டனர்.

Raghuvaran actor

உண்மையாகவேய எனக்கு அப்போது மிகவும் கஷ்டமாக இருந்தது, ஒருவரது வீட்டில் இதுபோன்ற துக்க நிகழ்வின் போதும் கூட தனிமை இல்லை என்றால் என்ன செய்வது. இதனால் சில ஆண்டுகள் நான் எந்த பத்திரிகைகளிலும் பேசவில்லை.” என்று உணர்ச்சிவசப்பட்டு தன்னுடைய தெரிவித்துள்ளார் நடிகை ரோகினி.