உடற் பயிற்சி மூலம் உடலை மெருகேற்றியுள்ள ரஹ்மான். புகைப்படத்தை பார்த்தா ஷாக்காவிங்க.

0
80181
- Advertisement -

தமிழ் சினிமா திரை உலகில் 90 காலகட்டங்களில் இருந்த முன்னணி நடிகர்களில் பிரபலமானவர் நடிகர் ரகுமான். இவர் 1967ஆம் ஆண்டு அபுதாபியில் பிறந்தவர். இவருடைய உண்மையான பெயர் ரசின் ரகுமான் என்பது ஆகும். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் நடித்து உள்ளார். மேலும்,இவர் 1983-ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த ‘கூடுவிடே’ என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமா துறைக்கு அறிமுகமானார். மேலும் ,புதுப்புது அர்த்தங்கள் திரைப்படத்தில் நடிகர் ரகுமானை வைத்து இயக்குனர் பாலச்சந்திரன் அவர்கள் இயக்கி உள்ளார். இவர் மெஹ்ருனிசா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவருக்கு ருஸ்டா, அலிசா என்று இரு குழந்தைகள் உள்ளார்கள். மேலும்,நடிகர் ரகுமான் நடித்த புரியாத புதிர் படம் மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றதாகும்.

-விளம்பரம்-

அதற்கு பிறகு அவர் எதிரி,பில்லா, வந்தான் வென்றான் இது போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவருடைய ‘கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே’ என்ற பாடலின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தவர். இதனைத்தொடர்ந்து நடிகர் ரகுமான் அவர்கள் தமிழில் 100க்கு மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். பின் நீண்ட நாட்கள் சினிமா விடமிருந்து கொஞ்சம் பிரேக் எடுத்தார். அதற்கு பிறகு 2016 ஆம் ஆண்டு துருவங்கள் பதினாறு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரி -என்ட்ரி கொடுத்தார். அதுமட்டுமில்லாமல் இவர் கதைக்கு முக்கியத்துவம் அதாவது அழுத்தமான கதாபாத்திரங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இதையும் பாருங்க : என்ன பட வாய்ப்பு கிடைச்சிடுச்சா. உடல் எடையை குறைத்து வரும் லாஸ்லியா.

- Advertisement -

மேலும்,நடிகர் ரகுமான் சிறு இடைவெளிக்கு பிறகு தற்போது சினிமா உலகில் ரவுண்டு கட்டி அடிக்கிறார் என்று கூட சொல்லலாம். அதுமட்டும் இல்லாமல் தெலுங்கு, தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் ஹீரோவாக நடிக்கிறார் என்ற தகவல் வெளிவந்து உள்ளது. இந்நிலையில் தற்போது இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மூன்று மொழியிலும் பிஸியாக விட்டார் என்றும் குறிப்பிடத்தக்கது. மேலும்,இவர் நடிகர் ப்ரித்விராஜுடன் இணைந்து நடித்து கடந்த ஆறாம் தேதி வெளியான மலையாள படமான ரணம். இந்த படம் மக்களிடையே மிகப்பெரிய வெற்றியையும், வசூலையும் பெற்றுத் தந்தது. இதனால் ரகுமான் பயங்கர உற்சாகத்திலும், சந்தோஷத்திலும் இருக்கிறார். அடுத்து இவர் தெலுங்கில் காசி படத்தின் இயக்குனர் சங்கல்ப் ரெட்டியின் ‘அந்த ராக்ஷா’ என்ற படத்தில் வரும் தேஜாவுடன் நடித்து வருகிறார் என்ற தகவலும் வந்து உள்ளது.

மேலும் ,மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இரண்டு படங்களுக்கு மேல் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடிக்க இருக்கிறார் என்றும் சின்ன இடைவெளி எடுத்தாலும் பயங்கரமாக சினிமா துறையில் பட்டைய கிளப்பியுள்ளார் ரகுமான் என்று கூறுகிறார்கள். இந்நிலையில் தன்னுடைய உடலை மெருகேற்றும் அளவிற்கு உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என்ற கருத்துக்களும் வருகின்றது. மேலும், தற்போது இவருக்கு 52 வயதுக்கு மேல் ஆகிறது. இப்போது கூட இவர் தன்னுடைய உடலை அழகாகவும், பயிற்சிகளை சரியான முறையில் மேற்கொண்டு உள்ளார் என தெரியவந்துள்ளது. மேலும், அவருடைய உடற்பயிற்சி செய்த புகைப்படங்களை பார்க்கும் போது ரசிகர்கள் பல கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதோடு இவர் புது படங்களுக்காக தான் இப்படி உடலை மெருகேற்றுகிறாரா?என கேள்விகளை எழுப்பிக்கின்றன.

-விளம்பரம்-
Advertisement