என்னை தவிர வேறு யாருக்கும் கை கட்டி நடிக்க மாட்டேன் என்று மம்மூட்டி கூறிவிட்டார். பிரபல தமிழ் நடிகருக்கு கிடைத்த மரியாதை

0
90338
shylock
- Advertisement -

மலையாள சூப்பர் ஸ்டார் என்று சொன்னால் அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது நடிகர் மம்முட்டி அவர்கள் தான். நடிகர் மம்முட்டி அவர்களின் உண்மையான பெயர் முகமது குட்டி. இவர் தன்னுடைய நடிப்பு திறனுக்காக பல முறை தேசிய விருதுகளை வாங்கி உள்ளார். இதுவரை இவர் 400 திரைப்படங்களுக்கும் மேல் நடித்து உள்ளார். மேலும், இவர் மலையாளம், தமிழ், இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்து உள்ளார். நடிகர் மம்முட்டி அவர்கள் தமிழில் ஆனந்தம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஜூனியர் சீனியர், பேரன்பு என பல படங்களில் நடித்து உள்ளார். பெரும்பாலும் இவருடைய படங்கள் எல்லாம் பிளாக் பஸ்டர் தான்.

Related image

- Advertisement -

சமீபத்தில் மம்முட்டி அவர்களின் நடிப்பில் வெளிவந்த “மாமாங்கம்” படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் 12 வருடங்களுக்கு ஒருமுறை பழரிப் பட்டுவின் திருவையாறில் நடக்கும் கலாச்சார விழாவை கொண்ட கதையாக அமைந்து உள்ளது. இப்படத்தை இயக்குனர் பத்ம குமார் அவர்கள் இயக்கி உள்ளார். வேணு முன்னா பிள்ளை அவர்கள் இந்த படத்தை தயாரித்து உள்ளார். மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவான சரித்திர படம் தான் மாமாங்கம். இந்த படத்தில் மம்முட்டி, உன்னி முகுந்தன்,சித்திக், மணிகுட்டன், மணிகண்டன்,அனு சித்தாரா, இனியா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளனர். அதுமட்டும் இல்லாமல் நடிகர் மம்முட்டியின் மாமாங்கம் படம் மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியிடப்பட்டது.

இதையும் பாருங்க : மன்னிப்பெல்லாம் கேக்க முடியாது. ஆதாரத்துடன் கெத்து காட்டும் ரஜினி. வைரலாகும் வீடியோ.

இந்நிலையில் தற்போது மம்மூட்டி, ராஜ்கிரண் இருவரும் இணைந்து ஷைலாக் என்ற படத்தில் நடித்து உள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த படம் தமிழில் குபேரன் என்ற பெயரில் இந்த வெளியாக உள்ளது. இந்த படத்தில் நடிகை மீனா அவர்கள் ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடித்து உள்ளார். இந்த படத்தை அஜய் வாசுதேவ் அவர்கள் இயக்கி உள்ளார். சமீபத்தில் தான் இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. குபேரன் படத்தின் எழுத்து, வசனம், பாடல்கள் எல்லாம் ராஜ்கிரண் அவர்கள் எழுதி உள்ளார். இந்த படம் குறித்து சமீபத்தில் ராஜ்கிரண் அவர்கள் பேட்டி ஒன்று அளித்து இருந்தார்.

-விளம்பரம்-

அதில் அவர் கூறியது, சினிமா உலகில் மிகப் பெரிய லெஜன்ட் மம்முட்டி. அவர் இதுவரை 400 படங்களுக்கு மேல் நடித்து உள்ளார். நிறைய தேசிய விருதுகளை கூட வாங்கியுள்ளார். இந்த படத்தின் கதையை கேட்டு ஓகே பண்ணும் போது அவர் இந்த கதாபாத்திரத்தில் ராஜ்கிரண் நடித்தால் தான் நான் படத்தில் நடிப்பேன். வேற யார் இந்த கதாபாத்திரத்தில் பண்ணாலும் நான் நடிக்க மாட்டேன் என்று கூறினார். இந்த படத்தில் எனக்கு கை கட்டி நிற்க கதாபாத்திரத்தில் மம்முட்டி அவர்கள் நடித்து இருக்கிறார். அதனால் தான் அவர் இந்த படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று கேட்டார். அதோடு மம்முட்டி அவர்கள் சொன்னது, இந்த படத்தில் நான் ராஜ்கிரண் சாருக்கு மட்டும் தான் கைகட்டி நிற்பேன். வேறு யாருக்கும் கைகட்டி நிற்க மாட்டேன் என்று கூறினார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது அவர் என்னை தல என்று கூப்பிடுவார், நான் அவரை தளபதி என்று கூப்பிடுவேன் என்று கூறினார்.

Advertisement