தனது குடும்பத்திற்கே ரசிகராக இருந்தவரின் மறைவு. குடும்பத்தாருக்கு ராம் சரண் செய்த உதவி. குவியும் பாராட்டு.

0
4798
Ramcharan
- Advertisement -

தெலுங்கு சினிமா உலகில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் ராம் சரண். இவர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சிறுத்தை என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவுக்கு துறைக்கு அறிமுகமானர். அதனைத் தொடர்ந்து தற்போது வரை பல வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ஆவார். தந்தையைப் போலவே மகனும் டோலிவுட்டில் பட்டையை கிளப்பிக் கொண்டு வருகிறார். ராம் சரண் அவர்கள் திரைப்பட நடிகர் மட்டும் இல்லாமல் திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். இவருடைய நடிப்பில் வந்த மாவீரன் படம் பல மொழிகளிலும் சூப்பர் ஹிட் கொடுத்தது. 2018 ஆம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் வெளிவந்த படம் ரங்கஸ்தலம். இந்த படத்தில் ராம் சரண், சமந்தா, ஆதி, அனுஷ்யா, ஜெகபதி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் மிகப் பெரிய அளவில் வெற்றி அடைந்தது.

-விளம்பரம்-
ராம் சரண் தர்கா சென்ற போது

இதனை தொடர்ந்து தற்போது நடிகர் ராம் சரண் அவர்கள் தெலுங்கில் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி இயக்கும் RRR என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராம் சரணுடன் பிரபலமான நடிகர் ஜூனியர் என்டிஆரும் இணைந்து நடித்து வருகிறார். இரண்டு மாஸ் ஹீரோக்கள் இணைந்து இந்த படத்தில் ஒரு கலக்கு கலக்க போகிறார்கள். இந்த படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளார்கள். அது மட்டும் இல்லாமல் படம் வெளியாகும் முன்பே இந்தப் படம் பல கோடிகள் வியாபாரம் ஆகி உள்ளது என்று டோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் ராம் சரனின் தீவிர ரசிகர் தற்போது இறந்து உள்ளார். இதனை அறிந்த ராம் சரன் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்து உள்ளார்.

- Advertisement -

இதையும் பாருங்க : கணவரின் தொல்லையால் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுபாதிக்கப்பட்ட ஜெயஸ்ரீயின் தற்போதைய நிலை இதுதான்.

தெலுங்கு சினிமாவில் மட்டும் இல்லாமல் பிற மொழிகளிலும் நடிகர் ராம் சரணுக்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் இவருடைய தீவிர ரசிகரான நூர் முகமது தற்போது திடீரென்று இறந்து உள்ளார். இவர் இறந்த தகவல் ராம் சரணை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது. பின் நடிகர் ராம் சரண் அவர்கள் தன்னுடைய ரசிகர் நூர் முகமது குடும்பத்தை நேரில் சந்தித்து அவர்களுக்கு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்து உள்ளார்.

-விளம்பரம்-

பின் அவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கி உள்ளார். இது மட்டுமில்லாமல் நூர் முகமது அவர்களின் குழந்தைகளின் படிப்புக்கும், வேலை வாய்ப்பிற்கும் உதவி செய்வதாக ராம் சரன் உறுதி அளித்து உள்ளார். இப்படி நடிகர் ராம் சரண் அவர்கள் தன்னுடைய ரசிகர்காக செய்த செயலைப் பார்த்து சமூக வலைத்தளங்களில் அனைவரும் ராம் சரணுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement