பல்வேறு விஜய் சேதுபதி படங்களில் நடித்த நடிகர் ரமேஷ் திலக்கிற்கு குழந்தை பிறந்தது.

0
1226
rameshtilak
- Advertisement -

தமிழில் சூது கவ்வும் படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகர் ரமேஷ் திலகிற்கு குழந்தை பிறந்துள்ளது. தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘சூது கவ்வும்’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் ரமேஷ். இவர் சூது கவ்வும் படத்திற்கு முன்பாகவே மாப்பிளை, மங்காத்தா, மரீனா போன்ற பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ சூது கவ்வும் படத்தின் மூலம் தான்.

-விளம்பரம்-

சூது கவ்வும் படத்திற்கு பிறகு ஆண்டவன் கட்டளை, நேரம், காக்கா முட்டை, ஆரஞ்சு மிட்டாய், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு எனப் பல வெற்றிப்படங்களில் நடித்து உள்ளார்.பெரும்பாலும் இவர் விஜய் சேதுபதி படங்களில் இடம்பெற்று விடுவார். சமீபத்தில் வெளிவந்த ‘ஓ மை கடவுளே’ படத்தில் லவ் கோர்ட்டில் விஜய் சேதுபதியுடன் கடவுளின் சகாவாக தூள் கிளப்பியவர் நடிகர் ரமேஷ் திலக்.

இதையும் பாருங்க : என்னது வனிதா மகளும் நடிகையா ? இத பாருங்க என்னனு.

- Advertisement -

இவர் முதலில் சூரியன் எம்.எம்மில் ஆர்.ஜேவாக இருந்து பின்னர் நடிக்க வந்தவர் ஆவார். இவருக்கும் ஆர்.ஜே நவலட்சுமி என்பவருக்கும் கடந்த 2018 ஆம், ஆண்டு மார்ச் மாதம் திருமண நடைபெற்றது. இந்த திருமணத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர் திருமணம் செய்து கொண்ட நவலக்ஷ்மி, சூரியன் எஃப்.எம்மில் இவர் பணியாற்றிய போது காதலித்தது வந்தவர் தான்.

ஆர்.ஜேயிங்ல இவங்களைவிட நாலு வருஷம் ஆஃபீஸ்ல சீனியர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரமேஷ் – நவலக்ஷ்மி தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாம். அதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள ரமேஷ் திலக், எனக்கு ஒரு தலைவன் பிறந்திருக்கிறான் என்று பதிவிட்டுள்ளார். வாழ்த்துக்கள் ரமேஷ் திலக்.

-விளம்பரம்-
Advertisement