ஒரு விஜய் இல்லை ஆயிரம் விஜய் வந்தாலும் தமிழ்நாட்டை – நடிகர் ரஞ்சித்தின் ஆவேச பேட்டி

0
645
- Advertisement -

விஜயின் அரசியல் வருகை குறித்து பா ரஞ்சித் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது கடந்த சில வாரங்களாகவே விஜய்யின் புது கட்சி குறித்த அப்டேட் தான் வைரலாகி வருகிறது. விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் ஈடுபட்டாலும், தங்களின் ஜனநாயக கடமையை செய்வதில் தவறுவதில்லை. விஜய் சினிமாவை தாண்டி பொதுநல சேவைகளையும் செய்து கொண்டு வருகிறார். அதோடு விஜய் அடிக்கடி ஆலோசனை கூட்டம் நடத்தி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்.

-விளம்பரம்-

இது எல்லாம் அரசியல் வட்டாரத்தில் பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பின் அனைவரும் எதிர்பார்த்தபடி விஜய் அரசியலில் களமிறங்குவதை உறுதி செய்து விட்டார். அந்த வகையில் சமீபத்தில் விஜய் தன்னுடைய புதிய கட்சியின் பெயரை அறிவித்து தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்து இருக்கிறார். தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைத்து இருக்கிறார் விஜய். இது ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு உற்சாகத்தை கொடுத்து இருக்கிறது. அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர்.

- Advertisement -

தமிழக வெற்றி கழகம் :

மேலும், விஜய் அவர்கள் கட்சியின் கொடி, சின்னம் ஆகியவற்றை தேர்வு செய்யும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதை அடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் விஜய் உத்தரவின் பேரில் சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலைய செயலக அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சிக்கு புதிதாக இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று கூறப்பட்டது.
அதுக்காக சிறப்பு செயலி உருவாக்கப்படும் என்றும் அடுத்த வாரம் முதல் அந்த செயலி செயல்பாட்டுக்கு வர இருப்பதாகவும் கூறப்பட்டது. தற்போது அதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் நடந்து வருகின்றது.

நடிகர் ரஞ்சித் பேட்டி:

இப்படி இருக்கும் நிலையில் அரசியலுக்கு விஜய் வருவது குறித்து பிரபலங்கள் பலருமே தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் ரஞ்சித் பேட்டியில் கூறியிருப்பது, இதுவரை எத்தனையோ கட்சிகள் ஆட்சிக்கு வந்து சென்றிருக்கிறது. இந்த கட்சிகளால் தமிழ்நாட்டிற்கு என்ன நல்லது நடந்தது? மது ஒழிப்பை ஒழிப்போம், இலவசக் கல்வி வழங்கப்படும் என்றெல்லாம் சொன்னார்கள். எதையாவது நடத்தினார்கள்? ஒவ்வொரு கட்சியும் தேர்தலில் நிற்க்கும் போது ஆயிரக்கணக்கான வாக்குறுதிகளை கொடுக்கிறார்கள்.

-விளம்பரம்-

அரசியல் நிலை:

பின் அதை எதையுமே நிறைவேற்றவில்லை. ஒருவர் தாங்கள் கொடுத்த வாக்கை நிறைவேற்றவில்லை என்றால் அவரை தூக்கி சிறையில் அடைக்க முடியாது. ஒரு ஓட்டுக்கு ஆயிரம் கணக்கில் பணம் கொடுக்கிறார்கள். இப்போது எல்லாம் குவாட்டரும், கோழி பிரியாணியும் விலை குறைந்துவிட்டது. அதனால் ஒரு தலைக்கு பத்தாயிரம் ரூபாய் முதல் ஒரு வீட்டிற்கு ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் கொடுக்கிறார்கள். ஒரு எம்எல்ஏ போட்டியிட வேண்டுமென்றால் அதற்கு கோடி கணக்கில் பணம் செலவிடும் நிலை தற்போது இருக்கிறது. இந்த பணம் சம்பாதிக்காத அந்த நபர் எல்லா வகையிலும் முறைகேடான வேலைகளை செய்கிறார்.

விஜய் அரசியல் குறித்து சொன்னது:

அதேபோல் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து நான் எந்த விதமான எதிர்ப்பும் தெரிவிக்க மாட்டேன். ஆனால், புதிதாக ஒருவர் அரசியலுக்கு வருகிறார் என்றால் அவரை இங்கு இருப்பவர்கள் உள்ளே வரவிட மாட்டார்கள். அவர்களே எல்லாவற்றையும் திருடி கொள்ள வேண்டும் என்பது தான் அவர்களுடைய எண்ணம். தமிழ்நாடு இப்போது இருக்கும் நிலையில் ஒரு விஜய் இல்லை ஆயிரம் விஜய் வந்தால் கூட காப்பாற்ற முடியாது. ஆக, விஜய் அரசியலுக்கு வந்து நான் சொன்னதை எல்லாம் மாற்றி காட்டினார் என்றால் அவரை கடவுளாக கும்பிடுவேன். நெஞ்சில் பச்சை குத்தி கொள்வேன் என்று எமோஷனலாக பேசியிருந்தார்.

Advertisement