பார்த்திபன் ஒரு அவார்ட் பைத்தியம்னா, GVM இந்த பைத்தியம், ஆனா இன்னும் அவருக்கு பைத்தியம் தெளியல – VTK படத்தை வச்சி செய்த ப்ளூ சட்டை.

0
464
vendhu
- Advertisement -

சமீபத்தில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு ‘ படத்தை ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்து இருக்கிறார். அவரது விமர்சனத்தில் பேசியதாவது ‘பார்த்திபன் ஒரு அவார்ட் பைத்தியம் என்றால், கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு வாய்ஸ் ஓவர் பைத்தியம். இதை நன்றாகவே கண்டுபிடித்து மக்கள் போன படத்திலேயே கலாய்த்து விட்டதால் இனி வாய்ஸ் ஓவர் கொடுத்தால் நம்மை கலைப்பார்கள் என்று இந்த படத்தில் அப்பு குட்டி மூலமாக வாய்ஸ் ஓவரில் கதையை சொல்ல ஆரம்பித்திருக்கிறார். இதிலிருந்து என்ன தெரிகிறது கௌதம் மேனனுக்கு இன்னும் அந்த பைத்தியம் முழுதாக குணமாகவில்லை என்பது தெரிகிறது.

-விளம்பரம்-

ஹீரோ ஒரு பெரிய டானாக மாறி வருகிறார் என்றதும் அவரை கொல்ல ஒரு பெரியபீசை ரெடி செய்கிறார்கள். அது யார் என்றால் விக்ரம் படத்தில் குட்டியாக லில்லி புட்டு போல மினி வாட்டர் போல வருவாரே அவரை ஒரு கோடி ரூபாய் கொடுத்து ஹீரோவை கொல்ல ஏற்பாடு செய்கிறார்கள். படத்தில் ஹீரோவிற்கு முதல் பாதி மற்றும் இரண்டாவது பாதியில் வேறு வேறு பாடி லாங்குவேஜ் செட் செய்திருக்கிறார்கள்.

- Advertisement -

ஹீரோவின் பாடி லாங்குவேஜ் :

முதல் பாதியில் கிராமத்தில் இருந்து வரும் ஹீரோ அரக்கி அரக்கி நடந்து வருகிறார். டவுனுக்கு வந்து டான் ஆனதும் கெத்தா நடந்து வருகிறார். ஏண்டா உங்களுக்கு படம் எடுக்க தெரியவில்லை என்றால் கிராமத்துக்காரனை ஏன் அசிங்கப்படுத்துகிறீர்கள்.கௌதம் மேனன் படம் என்றால் மேக்கிங் ஆவது நல்லா இருக்கும். கூலிப்பட படைகளை பற்றி படம் எடுக்கிறேன் என்று ஒரு அழுக்கு பிடித்த படத்தை எடுத்து இருக்கிறார்கள்.

ஒரு உப்மா படத்தை எடுத்திருக்காங்க :

ஹீரோ மற்றும் ஹீரோயினி 10 ஜிம் பாய்ஸ் மட்டும் கூட்டிக்கொண்டு போய் ரோட்டில் நடத்திவிட்டு ஒரு உப்மா படத்தை எடுத்து வைத்திருக்கிறார்கள். ஒரு கதை என்றால் மைய கதாபாத்திரத்திற்கு ஏதாவது ஒரு நோக்கம் இருக்க வேண்டும். ஹீரோ கதாபாத்திரத்திற்கு என்ன நோக்கம் என்பது தெரியவில்லை. படத்தில் ஒரு பாட்டு நல்லா இருக்க வேண்டும் இல்லை fightஆவது நல்லா இருக்க வேண்டும் இல்லை ஒரு நான்கு கேரக்டர்கள் ஆவது நல்லா இருக்க வேண்டும். ஆனால் இந்த படத்தில் எதுவுமே கிடையாது.

-விளம்பரம்-

ஏ ஆர் ரஹ்மான் இசை :

ஏ ஆர் ரகுமான் எல்லாம் படத்தின் மூடுக்கு வாசிக்க வேண்டும் என்று தெரியாமல் நான் வாசிக்கிறேன் என் மூடுக்கு நீங்க மியூசிக்க செட் ஆக்கிடுங்கடா என்று மியூசிக் போட்டிருக்கிறார். படத்தின் கிளைமாக்ஸ் ஹீரோ சொல்வார் இந்த இடத்தை விட்டு தப்பிக்கலாம் என்று பார்த்தால் திரும்பத் திரும்ப இங்கேயே வந்து மாட்டிக் கொள்கிறேன் என்று, இந்த விஷயம் நமக்கு படத்தின் பர்ஸ்ட் லுக்கை விடும்போதே தெரிந்தது.மேலும், இயக்குனரே 4 மணி ஷோவிற்கு செல்பவர்கள் எல்லாம் நன்றாக படுத்து உறங்கி விட்டு செல்லுங்கள் என்று சொல்லி இருந்தார்.

வீணா போனவன் எப்படி டான் ஆனான்

அப்போதே ஒரு கருகிற வாடை அடித்து இருந்தது. படத்தின் ஆரம்பத்தில் ஒருவன் சொல்லுவான் ஒரு 5000 ரூபாய் கொடுத்தால் உன்னை விட்டு விடுகிறேன் என்று இது தெரிந்திருந்தால் நாம் எல்லாம் சேர்ந்து 5000 ரூபாய் திரட்டி கொடுத்திருந்தால் தப்பித்து இருக்கலாம். இப்படி 5000 ரூபாய் பிரச்சனையில் வீணா போனவன் எப்படி டான் ஆனான் என்பதை தான் எடுத்து வைத்திருக்கிறார்கள்

Advertisement