ரிலீசுக்கு பின் கவுண்டம்பாளையம் படம் தொடர்பாக நடிகர் ரஞ்சித் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் படங்களில் நண்பனாகவும், வில்லனாகவும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் ரஞ்சித். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து இருக்கிறார். இறுதியாக இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் ஜீவன் நடித்த ‘அதிபர்’ என்ற படத்தில் நடித்து இருந்தார்.
அதன் பின்னர் தமிழில் இவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. சிறிய இடைவெளிக்கு பின் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘செந்தூரப்பூவே’ தொடர் மூலம் மீண்டும் நடிக்கத் துவங்கினார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ தொடரில் பழனிச்சாமி என்ற ரோலில் கலக்கி வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பின் நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்திருக்கும் படம் ‘குழந்தை C/O கவுண்டம் பாளையம்’.
குழந்தை C/O கவுண்டம் பாளையம்:
நாடக காதலை மையமாக வைத்து இந்த படத்தை நடிகர் ரஞ்சித் எடுத்து இருக்கிறார். இந்த படம் ஜூலை 5 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், வெளியாகவில்லை. பின் இந்த படத்தினுடைய ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதிலிருந்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக, கடந்த சில வாரங்களாகவே நடிகர் ரஞ்சித்தின் கவுண்டபாளையம் படம் குறித்த செய்திகள் தான் அதிகமாக இணையத்தில் அதிகபரப்பட்டுவருகிறது.
செருப்பு பிஞ்சிடும்டா ரஞ்சித் https://t.co/RX5UYqjKUp
— Srividhya (@Srividhya_Hari) August 10, 2024
படம் குறித்த தகவல்:
இவர் இந்த படம் இயக்க ஆரம்பத்திலிருந்து இது குறித்த சர்ச்சைகள், விமர்சனங்கள் எழுந்து இருக்கிறது. குறிப்பாக, நடிகர் ரஞ்சித் அவர்கள் மறைமுகமாக வி.சி.க தலைவர் திருமாவளவன் அவர்களை தாக்கி பேசியிருக்கிறார் என்றெல்லாம் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருந்தது. மேலும், பல சர்ச்சைகளுக்கு பிறகு நேற்று கவுண்டபாளையம் படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. படத்தினுடைய முதல் காட்சி பார்த்துவிட்டு நடிகரும் இயக்குனருமான ரஞ்சித் அவர்கள் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருக்கிறார்.
ரஞ்சித் பேட்டி:
அப்போது அவர், என்னுடைய படத்திற்கு எந்த ஒரு ஜாதி பெயரையும் வைக்கவில்லை. கவுண்டம்பாளையம் என்பது ஒரு சட்டமன்ற தொகுதி. அது ஒரு ஊருடைய பெயர். அதைத்தான் படத்திற்கு வைத்திருக்கிறேன். பார்வையாளர்கள் உடைய கண்ணோட்டம் தான் அப்படி இருக்கிறது. என் மீது பழி சுமத்த வேண்டும் என்று தேவையில்லாத சிலர் செய்யும் வேலை தான் இது. இந்தப் படத்தில் ஆணவ படுகொலை என்பது வன்முறையோ, கலவரமோ கிடையாது என்பதை தான் சொல்லியிருக்கிறேன்.
படம் குறித்து சொன்னது:
நம்முடைய ஒரு பொருள், பைக்கை ஒருவர் தூக்கி சென்றால் கோபமாக போய் அவரை நாம் அடிப்பது இல்லையா? அதே மாதிரி தான் பார்த்து, பார்த்து நம்முடைய பிள்ளைகளை வளர்த்து யாரோ ஒருவர் கூட்டிக் கொண்டு போகும் போது பிள்ளைகள் மீது வரும் அக்கறையோட வெளிப்பாடு தான் இது. குழந்தைகளை பெற்று, எவ்வளவு கட்டப்பட்டு வளர்க்கிறார்கள் என்பது பெற்றோர்களுக்கு தான் தெரியும். இது எல்லாம் அவர்கள் உணர்ச்சி வசப்பட்டு செய்யும் செயல் தான். மற்றபடி இது வன்முறையோ, கொலையோ கிடையாது என்று கூறியிருக்கிறார்.