அண்ணாமலைக்கு வாய்ப்பு கொடுத்தால் தான் அது தெரியும் – நடிகர் ரஞ்சித் பேட்டி.

0
469
- Advertisement -

கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்கே திரிஷா விவகாரம் தான். கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதியில் அதிமுக நிர்வாகிகள் சுமார் 100 பேர் ஒரு வாரம் தங்கி இருந்தார்கள். இந்த விடுதியில் பல நடிகைகளும் தங்கி உல்லாசம் செய்து இருந்ததாக தகவல் வந்திருந்தது. பின் இது தொடர்பாக சமீபத்தில் அதிமுக கட்சியின் முன்னாள் உறுப்பினர் ஏவி ராஜு பேட்டியில் கூறியிருப்பது, எடப்பாடிக்கு குடிப்பழக்கம் எல்லாம் கிடையாது.

-விளம்பரம்-

அவர் திரிஷா வேணும்னு கேட்டுட்டான். நடிகர் கருணாஸ் தான் இது எல்லாம் ஏற்பாடு செய்து வைத்திருந்தார். அங்கு நிறைய நடிகைகள் இருந்தார்கள். திரிஷாவுக்கு மட்டுமே 25 லட்சம் கொடுத்து இருந்தாங்க என்று பேசி இருந்தார். இப்படி இவர் பேசி இருந்த வீடியோ மிகப்பெரிய அளவில் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து பிரபலங்கள் பலருமே ஏ வி ராஜூவு க்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக நடிகை திரிஷா, ராஜுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து இனி என் வழக்கறிஞர்கள் குழு பார்த்துக் கொள்வார்கள் என்று சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார்.

- Advertisement -

நடிகர் ரஞ்சித் பேட்டி:

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கோவை காந்திபுரம் பகுதியில் சாய் பிரசாத் எனும் புதிய ஸ்டுடியோ சிறப்பு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஞ்சித் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து, நடிகை திரிஷா விவகாரத்தில் யாரும் தனிப்பட்ட முறையில் தெரியாது. நாகரிகம் என்பது எல்லோருக்கும் அடங்கிய ஒரு விஷயம். எல்லோரும் செய்யும் வேலை போன்று நடிப்பு என்பது ஒரு வேலை. உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் சரி, பூ விற்க்கும் ஒரு பெண்ணாக இருந்தாலும் மானம், மரியாதை என்பது உயர்ந்த பண்பு.

திரிஷா விவகாரம் குறித்து சொன்னது:

சோசியல் மீடியாவில் பிரபலமாகுவதற்காக கூவத்தூர் விவகாரத்தை பேசியது அருவருக்கத்தக்க செயல். பொதுவாகவே நடிகர்கள் என்றாலே கூத்தாடிகள் என்ற கண்ணோட்டம் மக்கள் இருக்கிறது. ஆனால், நிஜ வாழ்க்கையில் நடிக்காத ஆளே இல்லை. இப்படி மனதை காயப்படுத்தும் படி அவர் பேசி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது போன்ற பேச்சு அரசியல் மீது அருவருக்கத்தக்க எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அடுத்த தலைமுறை இளைஞர்கள் படித்துவிட்டு அரசியலுக்கு வர வேண்டும். இந்த மாதிரியான சம்பவத்தால் அரசியல் என்றாலே சாக்கடை, குடித்துவிட்டு இப்படி தான் இருப்பார்கள் என்ற எண்ணத்தை வளர்க்கிறது.

-விளம்பரம்-

அரசியல் குறித்து சொன்னது:

இது போன்ற பேச்சுகளை அரசியல்வாதிகள் தவிர்க்க வேண்டும். இந்த விவகாரத்தில் என்னுடைய முழு ஆதரவும் திரிஷாவிற்கு உள்ளது. மேலும், தேர்தல் நேரங்களில் பதவிகளுக்காகவும் பணத்திற்காகவும் சிலர் கட்சி மாறுவது உண்டு. விஜயதாரணி பாரதிய ஜனதாவிற்கு மாறியது என்ன காரணத்திற்கு என்று தெரியவில்லை. இருந்தாலும், ஒரு நல்லாட்சி அமைய வேண்டும். தமிழ்நாட்டிற்கு நல்ல மாற்றம் வர வேண்டும் என்று மக்களோடு மக்களாக எனக்கும் ஒரு ஆசை இருக்கிறது.

அண்ணாமலை குறித்து சொன்னது:

அதேபோல் நடைபெற உள்ள தேர்தல் முடிவிற்கு பிறகு தான் தமிழகத்தில் பாஜாவிற்கான வாக்கு வங்கி உயர்ந்ததா? என்று தெரியும். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் செயல்பாடு எல்லாம் நன்றாக இருக்கிறது. அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். வாய்ப்பு கிடைத்தால் தான் அண்ணாமலை யார் என்பதை நிரூபிக்க முடியும். ஒரு திறமையான ஐபிஎஸ் அதிகாரி எந்த விஷயத்திலும் துணிச்சலாக செயல்பட கூடியவர். அப்படிப்பட்ட ஒரு அதிகாரி பதவியை துறந்து மக்களுக்காக பொது வாழ்க்கைக்கு வருகிறார் என்றால் அது ஒரு சிறந்த பண்பு தான். அவருக்கு வாய்ப்பு கொடுப்போம் என்று அரசியல் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement