என் மகள் திருமணத்தை ஊரே மெச்சிக்கொள்ளும் அளவுக்கு செய்தது இதனால் தான் – ரோபோ ஷங்கர் சொன்ன உருக்கமான காரணம்.

0
356
- Advertisement -

மகள் திருமணத்தை பல லட்சம் செலவு செய்து பிரம்மாண்டமாக நடத்திய காரணம் குறித்து ரோபோ ஷங்கர் கூறி இருக்கிறார். தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகனாக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் ரோபோ ஷங்கர். இவர் குறுகிய காலத்தில் தன்னுடைய நடிப்பாலும், நகைச்சுவை பேச்சாலும் தமிழ் சினிமாவில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார். முதலில் இவர் சின்னத்திரை நிகழ்ச்சியில் தான் பங்கேற்றார். அதன் பின் தான் இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

-விளம்பரம்-

பின் இவர் முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி ரோலில் நடித்து இருக்கிறார். தற்போது இவர் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இதனிடையே 2002 ஆம் ஆண்டு நடிகர் ரோபோ ஷங்கர் அவர்கள் பிரியங்கா என்ற ஒரு நடன கலைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் ஒரு மகள் இந்திரஜா. இவர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார் என்று சொல்லலாம்.

- Advertisement -

ரோபோ ஷங்கர் மகள்:

முதல் படத்திலேயே இவருடைய நடிப்பை பார்த்து பிரபலங்கள் பலருமே பாராட்டி இருந்தார்கள். அதற்குப் பின் இவர் ஜீ தமிழில் அர்ஜுன் தொகுத்து வழங்கியிருந்த சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து இருந்தார். ஆனால், இவரால் இறுதிவரை தாக்குப் பிடிக்க முடியவில்லை. அதனை தொடர்ந்து இவர் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளிவந்த விருமன் படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் சில படங்களில் கமிட்டாகி நடிப்பதாக கூறப்படுகிறது.

இப்படி ஒரு நிலையில் கடந்த மாதம் இவருக்கு கார்த்திக் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. வர் மதுரையில் தொடர்வோம் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். தற்போது இவர் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் ரோபோ சங்கரின் உறவினர் ஆவார். சமீபத்தில் தான் இவர்களின் திருமண நிச்சயதார்த்த நிகழ்வு நடைபெற்றது. இதில் ரோபோ சங்கர் குடும்பத்தினருக்கு நெருக்கமான உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டிருந்தார்கள்.

-விளம்பரம்-

இதை அடுத்து சில வாரத்திற்கு முன்பே இவர்களுடைய திருமண கொண்டாட்டங்கள் தொடங்கி விட்டது. பின் கடந்த வாரம் இந்திரஜா- கார்த்திக் திருமணம் மதுரையில் சிறப்பாக நடைபெற்று இருக்கிறது. வழக்கமாக சினிமா பிரபலங்கள் வீட்டு திருமணம் என்றாலே தடபுடலாக நடப்பது வழக்கம் தான். ஆனால், ரோபோ ஷங்கர் வீட்டு திருமணம் ஒரு வாரத்திற்கு முன்பே கலைகட்டியது. வட இந்தியாவில் நடப்பது போல சங்கீத், மெஹந்தி என்று படு கோலாகலாக தனது மகள் திருமணத்தை நடத்தியனார் ரோபோ ஷங்கர்.

இதனால் இவ்வளவு பிரம்மாண்டம் தேவையா என்று பலரும் விமர்சித்தனர். இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து பதில் அளித்துள்ள ரோபோ ஷங்கர் ‘எங்களுடைய திருமணத்தில் 25 பேர் தான் வந்தார்கள் மாப்பிள்ளை சைடு ஒரே ஒருவர்தான் அது நான் மட்டும்தான் ஏனென்றால் எங்கள் திருமணத்தில் என்னுடைய பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை. வடபழனி கோவிலில் வெறும் பத்துக்கு பத்து அறையில் என்னுடைய திருமணம் நடைபெற்றது என்னுடைய திருமணம் தான் இப்படி ஆகிவிட்டது அதனால் என்னுடைய மகள் கல்யாணத்தை ஒரே மெச்சி கொள்ளும் அளவிற்கு பண்ண வேண்டும் என்று செய்தேன்’ என்று கூறியுள்ளார்.

Advertisement