மீண்டும் உடல்நல பிரச்சனையால் நடிகர் ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகனாக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் ரோபோ ஷங்கர். குறுகிய காலத்தில் தன்னுடைய நடிப்பாலும், நகைச்சுவை பேச்சின் மூலம் சினிமா உலகில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ரோபோ சங்கர். முதலில் பாடி பில்டராக இருந்த இவர் மேடை காமெடியனாக அறிமுகமானர்.

அதன் பின்னர் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். மேலும், டிவி மூலம் கிடைத்த பிரபலத்தின் வாயிலாக தான் இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது. இவர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தீபாவளி என்ற படத்தின் மூலம் தான் சினிமா திரைக்கு அறிமுகமானார். ஆரம்பத்தில் இவர் படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதன் பின்னர் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என்று பல்வேறு நடிகர்களின் படத்தில் காமெடியனாக நடித்து வந்தார்.
ரோபோ சங்கர் திரைப்பயணம்:
இதற்கிடையிலே நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் அவஸ்தை பட்டு இருந்தது அனைவரும் அறிந்ததே. சில ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டு படுத்த படுக்கையாக இருந்தார். அது மட்டுமில்லாமல் இவர் குடிக்கு அடிமையாகி இருந்ததாகவும் கூறப்பட்டது. இதனால் இவருடைய உடல்நலம் ரொம்பவே பாதிக்கப்பட்டு மெலிந்து போயிருந்தார். பின் இவர் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்தார்.

ரோபோ சங்கர் உடல்நிலை:
அதற்குப்பின் இவர் பழைய நிலைமைக்கு மாறி சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். சமீபத்தில் கூட இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அது இது எது என்ற நிகழ்ச்சியில் தன்னுடைய மனைவி பிரியங்கா உடன் கலந்து கொண்டு இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் இன்று திடீரென ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, ரோபோ சங்கர் சென்னையில் சினிமா சூட்டிங் ஒன்றில் கலந்துகொண்டு நடித்து இருந்தார்.
https://www.youtube.com/watch?v=b36ho0pkkm4
சிகிச்சையில் ரோபோ சங்கர்:
அப்போது திடீரென்று அவருக்கு நீர் சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்திருக்கிறார். இதனால் பதறிப் போன பட குழுவினர் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார்கள். மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவர் விரைவில் குணமடைந்து வர வேண்டும் என்று வேண்டி வருகிறார்கள்.






