அந்த சம்பவத்துக்கு அப்புறம் படம் எடுக்குற எண்ணமே போய்டுச்சு – சமுத்திரகனி

0
307
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்து கொண்டிருப்பவர் சமுத்திரகனி. இவர் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த உன்னை சரணடைந்தேன் என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். அதை அடுத்து இவர் விஜயகாந்தை வைத்து நிறைந்த மனசு, சசிகுமாரின் நாடோடிகள், போராளி, ஜெயம் ரவியின் நிமிர்ந்து நில், அப்பா, தொண்டன், நாடோடிகள் 2, வினோதய அப்பா போன்ற பல படங்களை இயக்கியிருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவர் சசிகுமார் இயக்கத்தில் வெளியான சுப்பிரமணியபுரம் என்ற படத்தில் நடிகராகவும் மாறினார். அதைத்தொடர்ந்து இவர் ஈசன், சாட்டை, நீர் பறவை, வேலையில்லா பட்டதாரி, ரஜினி முருகன், விசாரணை, காலா, வடசென்னை, ஆர்ஆர்ஆர், துணிவு, தலைக்கூத்தல் ஆர்ஆர்ஆர் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த சைரன் என்ற படத்தில் சமுத்திரக்கனி நடித்திருக்கிறார்.

- Advertisement -

சமுத்திரக்கனி திரைப்பயணம்:

இதை அடுத்து இவர் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2, கேம் சேஞ்சர் போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்துக் கொண்டு வருகிறார். தற்போது சமுத்திரக்கனி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் யாவரும் வல்லவரே. இந்த படத்தை ராஜேந்திர சக்கரவர்த்தி இயக்கி இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் youtube சேனல் ஒன்றுக்கு சமுத்திரக்கனி பேட்டி அளித்திருக்கிறார். அப்போது அவரிடம் ஏன் சமீப காலமாக படங்களை இயக்குவது இல்லை என்று தொகுப்பாளர் கேட்டிருக்கிறார். அதற்கு சமுத்திரக்கனி,
அடுத்த சாட்டை படம் வெளியான போது மழை பயங்கரமாக பெய்தது.

சமுத்திரக்கனி பேட்டி:

இந்த மழையால் மக்கள் தியேட்டருக்கு வர ரொம்பவே சிரமப்பட்டார்கள். பெரிய ஹீரோக்களின் படம் என்றால் கொடையை பிடித்தாவது வந்து விடுவார்கள். சமுத்திரகனி படம் தானே அப்புறம் பார்த்துக் கொள்வோம் என்று இருந்து விட்டார்கள். வெள்ளிக்கிழமை படம் ரிலீஸ் ஆனது ஞாயிற்றுக்கிழமை என்னுடைய அலுவலகத்திற்கு படத்துக்காக கடன் கொடுத்தவர்கள் எல்லாமே வந்து விட்டார்கள். பின் அவர்கள், சார் உங்க படம் ஓடவில்லை. நாங்கள் கொடுத்த காசை கொடுங்க என்றெல்லாம் கேட்டார்கள். அதற்கு நான், படம் ஓடலைன்னு ஒரு வாரம் கழித்து வரக்கூடாதா? மூணாவது நாளே வந்து விடுவீங்களா? என்று கேட்டேன்.

-விளம்பரம்-

அடுத்த சாட்டை படம்:

படத்திற்காக கொடுத்த காசு எல்லாம் செலவு செய்து விட்டேன். உங்களுக்கு கொடுக்க வேண்டும் என்றால் நான் உழைத்து சம்பாதித்தான் கொடுக்கவேண்டும் என்றெல்லாம் சொன்னேன். ஆனால், அப்படி ஒரு சூழ்நிலை யாருக்குமே வரக்கூடாது. எனக்கு இறைவன் நடிப்பு என்று ஒன்று கொடுத்ததால் தான் நான் தப்பித்து விட்டேன். ஒரு சாமானிய மக்கள் மாட்டி இருந்தால் என்ன பண்ணி இருப்பார்கள்? என்று தெரியவில்லை. ஒருவரை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்கான எல்லாம் முயற்சிகளையும் எடுத்தார்கள்.

படம் எடுக்காத காரணம்:

அடுத்த சாட்டை ஒரு நல்ல படைப்பு, சமூகத்துக்கு தேவையான படம். கொஞ்சம் காத்திருந்தால் அடுத்த வாரம் வரை பார்க்கலாம். ஆனால், அவர்கள் எங்களுக்கே தெரியாமல் தியேட்டரில் இருந்து எடுத்து விட்டார்கள். இருந்தாலும் நான் அந்த படத்துக்காக செலவு செய்த காசை கொடுத்தேன். இந்த மாதிரியான சம்பவங்கள் தான் என்னால் இதே போன்ற ஒரு படைப்பை கொடுக்க மனசு வரவில்லை என்று வேதனையுடன் கூறி இருந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான அடுத்த சாட்டை படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றாலும் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது.

Advertisement