தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் எஸ் ஜே சூர்யா. இவர் நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், திரைக்கதையாசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவர் நடிகராகவதற்கு முன்பு மிகப்பிரபலமான இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இயக்கிய வாலி திரைப்படத்தின் மூலம் தான் இயக்குனராக சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார்.
தனது முதல் படத்திலேயே ஒரு மாபெரும் நடிகரை வைத்து சூப்பர் டுபர் ஹிட்டை அளித்தார் எஸ் ஜே சூர்யா. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் அஜித் அவருக்கு கார், பைக் எல்லாம் கூட பரிசலித்தார் என்ற செய்திகளும் உண்டு. அதே போல இப்படம் அஜித்தின் சினிமா வாழக்கையில் மாபெரும் வெற்றி அடைந்த படங்களில் இப்படமும் ஓன்று எனக் கூறலாம். இப்படத்தில் இரண்டு கதாபாத்திரமாக நடித்திருப்பார் அஜித் அதோடு கதாநாயகியாக சிம்ரன் நடித்திருப்பார். இந்நிலையில் தற்போது இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
மாரிமுத்து பேட்டி :
அந்த பதிவில் வாலி படத்தில் துணை இயக்குனராக இருந்த “எதிர்நீச்சல்” சீரியல் மாரிமுத்து பேசியிருந்தார் “அவர் கூறுகையில் நடிகர் அஜித்தினால் வாலி படத்தில் எடுக்க இருந்த ஒரு சூப்பர் சீன் எடுக்கவில்லை என்று கூறியிருந்தார். அவர் கூறுகையில் “வாலி படத்தில் சிம்ரன் தம்பி அஜித் என நினைத்து அண்ணனை கட்டிப்பிடித்து விடுவார். இப்படி தொடர்ந்து நடப்பதினால் மனமுடைந்த சிம்ரன் கட்டிலில் படுத்துக்கொண்டிருப்பர். இந்த காட்சியை நாங்கள் எடுக்கவே இல்லை.
ஆனால் கதைப்படி அப்படி சிம்ரன் இருக்கும் போது முகமுடி அணிந்த ஒரு உருவம் சிம்ரன் இருக்கும் அறையின் கதைவை திறக்கும். சிம்ரனும் அண்ணன் தான் வந்துவிட்டான் என நினைத்து பயந்தபடியே இருப்பார். அந்த உருவம் மெல்ல நெருங்கி வந்து தன்னுடைய முகமூடியை அவிழ்க்கும். ஆனாலும் அது அண்ணன் அஜித்தா அல்லது தம்பி அஜித்தா என சிம்ரனுக்கு குழப்பமாக இருக்கும். அதனால் பயந்து கொண்டே இருப்பர் நடிகை சிம்ரன்.
அப்படி ஒரு காட்சி :
அதற்கு பிறகு தன்னுடைய மனைவிக்கு அண்ணன் யார் தம்பி யார் என்று தெரியாமல் குழப்பம் வருவதை தவிர்க்க தம்பி அஜித் தன்னுடைய மீசையை எடுத்து விட்டதாக விளக்கம் கூறுவார். அதற்கு பிறகு தான் சிம்ரனுக்கு பயம் போகும். சரி இதனை தன்னுடைய அண்ணனிடம் சொல்லலாம் என்று நினைக்கும் போது அங்கு சென்று பார்த்தால் அண்ணன் காரை துடைத்து கொண்டிருக்க தம்பி கூப்பிடும் போது திரும்பும் அண்ணன் அஜித்தும் மீசையை எடுத்திருப்பார்.
— S J Suryah (@iam_SJSuryah) February 21, 2023
அஜித் மறுத்து விட்டார் :
இந்த காட்சி படத்தில் இருந்திருந்தால் படத்தை பார்த்த அனைவரும் அதிர்ந்திருப்பார்கள். ஆனால் அந்த காட்சியை அஜித்திடம் சொல்லவே அஜித்தை மீசையை கடைசியில் எடுத்துக்கொள்ளலாம் என மறுத்து விட்டார். அதோடு அவர் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் போட்டிருந்ததால் மீசையை எடுக்க முடியாது என கூறிவிட்டார். ஆனால் அந்த காட்சி படத்தில் இருந்திருந்தால் மிகவும் அருமையாக இருந்திருக்கும் என கூறியிருந்தார் எதிர்நீச்சல் மாரிமுத்து. தற்போது மாரிமுத்து எதிர்நீச்சல் சீரியல் மிகவும் பிரபலமாக டிஆர்பியில் முன்னிலை வகித்து வருவது குறிப்பிடதக்கது.