விஜய், அஜித் தொடங்கி நயன்தாரா வரை மதங்களை கடந்து திருமணம் செய்த பிரபலங்கள் பட்டியல்

0
269
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் நடிகர், நடிகைகள் மதம்- மொழி தாண்டி காதலித்து திருமணம் செய்து இருக்கிறார்கள். காதலுக்கு கண்ணில்லை என்பதை தவிர மொழி, ஜாதியும் இல்லை என்பதை பிரபலங்கள் நிரூபித்து இருக்கிறது. அந்த வகையில் மதங்களைக் கடந்து திருமணம் செய்த பிரபலங்களின் பட்டியில் தான் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

குஷ்பூ – சுந்தர் சி:

- Advertisement -

தமிழ் சினிமா உலகில் 80, 90 காலகட்டத்தில் ரசிகர்களுடைய கனவு கன்னியாக இருந்தவர் குஷ்பூ. தற்போதும் இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் சினிமாவை தாண்டி அரசியலிலும் அதிக ஈடுபாடு காண்பித்து வருகிறார். மேலும், இவர் மும்பையை சேர்ந்தவர். பிறப்பால் இவர் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். ஆனால், சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சுந்தர் சி இந்து மதத்தை சேர்ந்தவர். தற்போது இவர்களுக்கு அவந்திகா, அனந்திடா என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். தன்னுடைய கணவருக்காக இவர் இந்து மதத்தை பின்பற்றி வருகிறார்.

அஜித் – ஷாலினி:

-விளம்பரம்-

தமிழ் சினிமாவில் சிறந்த ஜோடிகளில் ஒருவர் அஜித்- ஷாலினி. 90 காலகட்டம் தொடங்கி தற்போது வரை அஜித் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. தற்போது இவர் விடாமுயற்சி படத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். மேலும், இவர் பிறப்பால் இந்து மதத்தை சேர்ந்தவர். ஆனால், நடிகை ஷாலினி கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். இருந்தாலும் இரு வீட்டார் சம்மதத்துடன் மதங்களை கடந்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். தற்போது இவர்களுக்கு அனோஷ்கா, ஆத்விக் என்ற இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.

விஜய் – சங்கீதா:

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் இளைய தளபதியாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பிளாக்பஸ்டர் ஹிட் தான். தற்போது இவர் கோட் படத்தில் நடித்து வருகிறார். இதை அடுத்து இவர் தளபதி 69 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை துவங்கி இருக்கிறார். இதனால் கூடிய விரைவிலேயே இவர் சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகி அரசியலில் ஈடுபட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், விஜய் அவர்கள் பிறப்பால் கிறிஸ்துவர். இவருடைய மனைவி சங்கீதா இந்து. இருவரும் மதங்களைக் கடந்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு ஜோசன் சஞ்சய், திவ்யா சாஷா என்ற பிள்ளைகள் இருக்கிறார்கள்.

சூர்யா – ஜோதிகா:

தமிழ் சினிமா உலகில் பிரபலமான ஜோடிகளில் இவர்களும் ஒருவர். சூர்யா நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதேபோல் ஜோதிகாவும் சிறிய இடைவெளிக்கு பிறகு தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம், இந்தி என்று பழமொழி படங்களில் நடித்து வருகிறார். மேலும், ஜோதிகா பிறப்பால் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். ஆனால், சூர்யா இந்து மதத்தை சேர்ந்தவர். பல போராட்டங்களுக்கு பிறகு தான் இவர்களுடைய திருமணம் நடந்தது. தற்போது இவர்களுக்கு தியா, தேவ் என்ற இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.

நயன்தாரா – விக்னேஷ் சிவன்:

தென்னிந்திய சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டிருப்பவர் நயன்தாரா. சமீப காலமாக இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் தமிழ், இந்தி என்ற பல மொழி படங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இவர் இயக்குனர் விக்னேஷ் இவனை காதலித்து கடந்த ஆண்டு தான் திருமணம் செய்து கொண்டார். பிறப்பால் நயன்தாரா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். ஆனால், விக்னேஷ் சிவன் இந்து மதத்தை சேர்ந்தவர். இதனால் இருவருமே இந்து- கிறிஸ்தவ முறைப்படி தான் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் இருவரும் வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்திருக்கிறார்கள்.

சமந்தா – நாக சைதன்யா:

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவின் மகன் தான் நாக சைதன்யா. இவரும் தெலுங்கில் பிரபலமான நடிகர் தான். தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர்கள் இருவரும் பல ஆண்டு காலமாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். பின் கருத்து வேறுபாடு காரணமாக இருவருமே சில ஆண்டுகளுக்கு முன் பிரிந்து விட்டார்கள். மேலும், சமந்தா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். நாக சைதன்யா இந்து மதம். திருமணத்திற்கு பிறகு சமந்தா இந்து மதத்தை பின்பற்ற தொடங்கினார். பிரிவிற்கு பிறகும் சமந்தா இந்து மதத்தை தான் பின்பற்றி வருகிறார். சமீப காலமாக இவர் பல்வேறு கோயில்களுக்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

யுவன் சங்கர் ராஜா – நிஷா:

தமிழ் சினிமா உலகில் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் சங்கர் ராஜா. தற்போது தமிழில் உள்ள பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இவர் தான் இசையமைத்துக் கொண்டிருக்கிறார். இவர் பிறப்பால் ஒரு இந்து சமூகத்தை சேர்ந்தவர். ஆனால், இவர் ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்தும் பெற்றிருக்கிறார். தற்போது இவர் இஸ்லாம் மதத்திற்கு மாறி இருக்கிறார். பின் இஸ்லாம் மதத்தை சேர்ந்த நிஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.

Advertisement