இரவு முழுக்க விஜய் அழுதான்..! விஜய்யை டப்பா மூஞ்சி சொன்னாங்க..! விஜய் மறுபக்கம் சொன்ன நண்பன் சஞ்சீவ்..!

0
602

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வரும் நடிகர் விஜய், அவரது அப்பா சந்திரசேகர் மூலமாக திரையுலகிற்கு வந்தாலும் தனது தனிப்பட்ட திறமையால் இன்று ஒரு உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். விஜய் இந்த இடத்தை பிடிக்க பல்வேறு அவமானங்களை சந்தித்து வந்துள்ளார் என்பது சமீபத்தில் விஜய்யின் நண்பரான சஞ்சீவ் மூலம் தற்போது தெரியவந்துள்ளது.

actor vijay

விஜயின் நெருங்கிய நண்பர் சஞ்சீவ்.விஜயுடன் பல்வேறு படங்களில் நடித்தவர். மேலும், விஜயின் வாழ்க்கையில் நடந்த ஒரு சில முக்கிய நிகழ்வுகளில் எப்போதும் அவருடன் இருந்தவர். திரைப்படங்களை தாண்டி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “திருமதி செல்வம் ” தொடரில் செல்வம் என்ற கதாபாத்திரத்தின் மூலம் குடும்ப ரசிகர்களையும் கவர்ந்தார்.

சஞ்சீவ் எந்த பேட்டியில் பங்குபெற்றாலும் அவரிடம் விஜய் குறித்த கேள்வி கண்டிப்பாக முன்வைக்கப்படும். அந்த வகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சஞ்சீவ்விடம் நடிகர் விஜய் குறித்து கேட்கப்பட்டபோதும் விஜய் குறித்த பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார் சஞ்சய், அந்த பேட்டியின் போது 27 வருடங்களுக்கு முன்னர் நடிகர் விஜய்யை பற்றி தனியார் பத்திரிக்கை ஒன்று தகர டப்பா மூஞ்சி என்று மோசமாக விமர்சனம் செய்த்தை குறித்து சஞ்ஜீவிடம் கேட்கப்பட்டது.

sanjeev

இது குறித்து பேசிய நடிகர் சஞ்சய், இந்த சம்பவத்தின் போது இரவு முழுவதும் விஜய் அழுது கொண்டே இருந்தான். அன்று ஒரு நியூ இயர் பண்டிகையோ, கிரிஸ்மஸ் பண்டிகை என்று நினைக்கிறேன், ஒரு முதல் படத்திலே ஒரு முன்னணி பத்திரிகையில் தகர டப்பா மூஞ்சி என்று விமர்சனம் செய்தது கண்டிப்பாக எந்த ஒரு ஹீரோக்கும் ஒரு வருத்தம் இருக்கும்.

முன்னணி பத்திரிகையில் வரும் விடயம் தான் ரசிகர்களிடமும் போய் சேரும், எங்கு போனாலும் தகர டப்பா மூஞ்சி என்று தானே கிண்டல் செய்வார்கள். மீடியா, பிரெஸ், தொலைக்காட்சி எல்லாமே ரசிகர்கர்களின் செல்வாக்கை பயன்படுத்திக்கொள்கின்றனர். விஜய்க்கு இதுபோன்ற ஒரு விமர்சனம் கிடைத்தால் அடுத்த படத்தில் அவர் நடிப்பதற்கு முன்பாக அவர் தன்னுடைய தோற்றத்தை மாற்ற வேண்டும், நன்றாகவும் நடிக்க வேண்டும் என்ற கூடுதல் பொறுப்பு அவருக்கு வந்தது.

sanjeev - vijay

அதே போல நன்றாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கு கிடைத்த தகர டப்பா என்ற பெயரையும் எடுக்க வேண்டும். இதை அனைத்தையும் ஒரு 20 வயதில் யோசிக்கும் போது யாராக இருந்தாலும் கொஞ்சம் தளர்ந்து விடுவார்கள். இப்போது இருக்கிற விஜய்யாக இருந்தால் அந்த விமர்சனத்தை வேறு விதமாக கையாண்டு இருப்பான். ஆனால், அப்போது அவனுக்கு 20 வயது தான், அதனால் அவர் மிகவும் வருத்தப்பட்டு அழுததும் உண்மை தான்.

ஆனால், அதன் பின்னர் தன்னை நிரூபித்து காண்பித்து விஜயை பற்றி விமர்சனம் செய்த அதே பத்திரிகையின் அட்டை படத்திற்காக விஜயிடம் வந்து நின்றனர். அவர்கள் விஜயிடம் வந்து உங்களது புகைப்படம் வேண்டும் என்று கேக்க வைத்தது அதுவே சாதனை தானே என்று கூறியுள்ளார் சஞ்சீவ்.