சந்தானம் சொத்து மதிப்பு எத்தனை கோடிகள் தெரியுமா ?

0
2046
santhanam-house

விஜய் டீவியில் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் தனது திரை வாழ்வை துவங்கியவர் நடிகர் சந்தானம். அதன் பின்னர் மன்மதன் படத்தில் நடித்து நல்ல காமெடி நடிகர் என்ற பெயர் பெற்றார். பின்னர் அடுத்தடுத்து பல காமெடி படங்களில் நடித்து புகழ்பெற்று, தமிழ் சினிமாவின் ஒரு சிறந்த காமெடி நடிகர் என்ற பெயரினையும் பெற்றார்.

santhanam actor

தற்போது காமெடியை தாண்டி ஹீரோவாக நடித்து வருகிறார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, சக்கைப்போடு போடுராஜா ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

இவரது சொத்து மதிப்பு தெரியுமா? சென்னையில் இவரது வீடு மட்டும் கிட்டத்தட்ட 9 கோடிக்கு கட்டப்பட்டுள்ளது. அது போக பல சொகுசு கார்களை வைத்துள்ளார். எத்தனை கார்களை வைத்திருந்தாலும் அவருக்கு பிடித்தது ரேஞ் ரோவர் தான். இந்த காரின் விலை 50 லட்சம் ரூபாய் ஆகும்.

santhanam actor

யூனிவர்செல், பொன்வண்டு சோப் என பல விளம்பரங்களில் நடித்துள்ளார் சந்தானம். இந்த விளம்பரங்களில் நடிக்க 10 லட்சத்திற்கு மேல் சம்பளமாக பெற்றுள்ளார். அத்தனையும் சேர்த்து தற்போது சந்தானத்தின் மொத்த சொத்து மதிப்பு 70 கோடி தேரும்.