பாகுபலியாக சந்தானம், கட்டப்பாவாக நம்ம மொட்டப்பா. வெளியானது ‘பிஸ்கோத்’ படத்தின் ட்ரைலர்.

0
23334
santhanam

தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக இருந்து முன்னணி நடிகராக கலக்கி கொண்டிருப்பவர் நடிகர் சந்தானம். சந்தானத்தின் நகைச்சுவை பேச்சுக்கும், டைமிங் பஞ்சுக்கும் எப்போதும் பஞ்சமே இல்லை. இவர் திரைப்பட நடிகர் மட்டும் இல்லாமல் திரைப்படத்தை தயாரித்தும் வருகிறார். ஆரம்பத்தில் இவருடைய சில படங்கள் தோல்வியில் முடிவடைந்தாலும் தன்னுடைய விடாமுயற்சியால் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் நடிகர் சந்தானம் அவர்கள் நடித்த தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2 ,ஏ1 போன்ற பல படங்கள் தொடர்ச்சியாக வெற்றி படங்களாக அமைந்தது.சமீபத்தில் சந்தானம் மற்றும் யோகி பாபு இணைந்து நடித்த டகால்டி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் சந்தானம் அவர்கள் மூன்று வேடங்களில் ‘டிக்கிலோனா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சந்தானம், ‘பிஸ்கோத்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியான நிலையில் இந்த படத்தை பற்றிய எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் இந்த படத்தில் நடிகர் சந்தானம் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ராஜா ராஜசிம்ஹா கெட்டப்பில் ஒரு சில காட்சிகளில் தோன்ற இருக்கிறாராம். அந்த புகைப்படம்சமீபத்தில் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. அதில் தமிழ் படம், தமிழ் படம் 2 போன்று பல்வேறு படங்களையும், ஹீரோக்களையும் ஸ்பூப் செய்து உள்ளார்கள். அதிலும் பாகுபலியாக சந்தானமும், கட்டப்பாவக வரும் மொட்ட ராஜேந்தித்திறனின் காட்சிகள் ட்ரைலரில் பார்க்கும் போதே கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement