சந்தானத்தின் மகனை பார்த்திருப்பீங்க அவருடைய மகளை பார்த்துள்ளீர்களா. என்னமா நடிக்கிறாங்க பாருங்க.

0
72207
santhanam
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக இருந்து முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சந்தானம். தற்போது நடிகர் சந்தானத்தின் மகனும் படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. காலகாலமாக சினிமா பிரபலங்கள் தங்களுடைய வாரிசுகளை சினிமாவில் நடிக்க வைப்பது வழக்கமான ஒன்று தானே. அந்த வகையில் நடிகர் சந்தானமும் சினிமா உலகில் தன் மகனை களம் இறக்குகிறார். நடிகர் சந்தானம் அவர்கள் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “லொள்ளு சபா” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் தான் மக்களிடையே பிரபலமானார்.

-விளம்பரம்-
santhanam son
சந்தானம் மகன் பாலாஜி

- Advertisement -

தமிழ் சினிமா உலகிற்கு காமெடி நடிகனாக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகர் சந்தனம். இவர் திரைப்பட நடிகர் மட்டும் இல்லாமல் திரைப்படத்தை தயாரித்தும் வருகிறார். மேலும், இவருடைய நகைச்சுவைக்கு பல விருதுகளை வாங்கி உள்ளார். ஆரம்பத்தில் இவருடைய சில படங்கள் தோல்வியில் முடிவடைந்தாலும் விடா முயற்சியால் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான டகால்டி படமும் தோல்வி படமாக அமைந்தது.

இதையும் பாருங்க : எதாவது அறிவிருக்கா ? வனிதா செய்த செயலால் போன் செய்து திட்டியுள்ள விஜய் சேதுபதி.

-விளம்பரம்-

நடிகர் சந்தானம் சினிமாவில் வருவதற்கு முன்பாகவே திருமணம் செய்துகொண்டார். உஷா என்பவருடன் நடிகர் சந்தானத்திற்கு கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மேலும், சந்தானத்திற்கு பூஜா என்ற மகளும் பாலாஜி என்ற மகனும் இருக்கிறார்கள். சந்தானத்தின் மகனின் புகைப்படம் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் சந்தானத்தின் மகள் பூஜா சந்தானத்துடன் இணைந்து டிக் டாக் செய்த வீடியோக்கள் சில சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

சந்தானம் டகால்டி படத்தை தொடர்ந்து நடிகர் சந்தானம் டிக்கிலோனா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மூன்று வேடங்களில் மூன்று வேடங்களில் நடிக்கிறார் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. அதோடு இந்த படத்தில் சந்தானத்தின் மகனும் நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றன. மேலும், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் தன்னுடைய மகனை ‘சிந்துபாத்’ என்ற திரைப் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அது மட்டும் இல்லாமல் நடிகர் கருணாஸ் அவர்களும் கூட தன்னுடைய மகனை சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான “அசுரன்” படத்தில் நடிக்க வைத்து உள்ளார்.

Advertisement