தனது அம்மா, அப்பா, தங்கையுடன் இருக்கும் நடிகர் சந்தானம். அறிய புகைப்படம்.

0
2913
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் கவுண்டமணி, செந்திலுக்கு பிறகு காமெடியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் சந்தானம். நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் வின் டிவி எனும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் டீக்கடை பெஞ்ச் என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் மீடியாவிற்கு நுழைந்தார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “லொள்ளு சபா” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் தான் இவர் மக்களிடையே பிரபலமானார்.

-விளம்பரம்-
தனது அம்மா, அப்பா, தங்கையுடன் சந்தானம்

அதனை தொடர்ந்து இவர் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வந்தார். பின்னர் நடிகை ராதிகா இயக்கிய அண்ணாமலை என்ற தொடரிலும் நடிகர் சந்தானம் நடித்து இருந்தார். ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை நிரூபித்த சந்தானம் பல போராட்டங்களுக்கு பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

சினிமாவில் நடிக்க வரும் முன்பு நடிகர் சந்தானம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்தவர் என்பது பலரும் அறிந்த ஒரு விஷயம் தான் ஆனால் நடிகர் சந்தானம் லொள்ளு சபாவில் இருந்தபோதே ஒரு லோக்கல் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்திருக்கிறார். ஆம் ரைட் என்ற தொலைக்காட்சியில் நடிகர் சந்தானம் நேயர்களுடன் பேசும் ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து இருக்கிறார்.

சந்தானத்தின் திருமண புகைப்படம்

இப்படி படிப்படியாக முன்னேறி இன்று தமிழ் சினிமாவில் இன்று தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார் சந்தானம். இந்த நிலையில் நடிகர் சந்தானத்தின் சிறு வயது புகைப்படம் ஒன்று சமீபத்தில் இணையத்தில் வைரலாக பிறவி வருகிறது. அதில் நடிகர் சந்தானம் தனது அம்மா, அப்பா, தங்கையுடன் இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement