அடுத்து சில காட்சிகள் வாரணாசியில் படமாக்கப்பட்டு முடிந்து விட்டது. இப்போது ரஜினி, திரிஷா நடிக்கும் சுவாரஸ்யமான காட்சிகளைப் படமாக்கிக் கொண்டிருக்கிறார், இயக்குநர் கார்த்தி சுப்புராஜ். ரஜினியின் ஃப்ளாஷ்பேக் காட்சிகளைப் படமாக்குவதை ரகசியமாக வைத்துள்ளார்கள்.
ரஜினியோடு ஒரு ஹீரோ பாபிசிம்ஹா, இன்னொரு ஹீரோ விஜய்சேதுபதி நடிப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இதில், தற்போது இன்னொரு ஹீரோவும் நடிக்கிறார். இதைப் படக்குழு ரகசியமாக வைத்துள்ளது. அதுவேறு யாரும் அல்ல, நடிகர் சசிகுமார் தான் தற்போது ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார். ரஜினியின் ஃப்ளாஷ்பேக் காட்சியில் அவருக்கு நண்பராக சசிக்குமார் நடிக்கிறார். தற்போது வாரணாசியில் நடந்துகொண்டிருக்கும் படப்பிடிப்பில், ரஜினியோடு சசிக்குமார் நடித்துக்கொண்டிருக்கிறார் என்பது ஹாட் நியூஸ். ஏற்கெனவே, ரஜினியின் மருமகன் தனுஷின் 'எனை நோக்கிப் பாயும் தோட்டா'வில் அவருக்கு அண்ணனாக சசிக்குமார் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.