வடிவேலுக்கு ரீ – என்ட்ரி படமாக அமைய இருந்த ‘நாய் சேகர்’ தலைப்பை இதனால் தான் விட்டுக்கொடுக்கல – சதிஷ் விளக்கம்.

0
16710
sathish
- Advertisement -

தளபதி விஜயின் நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்ற பிகில் படத்தைத் தொடர்ந்து தற்போது ஏஜிஎஸ் நிறுவனம் நகைச்சுவை நடிகர் சதீஸ்ஸை வைத்து ஒரு படம் தயாரிக்கிறார்கள். முதன்முதலாக சதீஸ் அவர்கள் கதாநாயகனாக இந்த படத்தில் தான் நடிக்கிறார். இப்படத்தில் சதீஸ்க்கு ஜோடியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பவித்ரா லட்சுமி நடிக்கிறார். இந்த படத்தை கிஷோர் ராஜ்குமார் இயக்கியுள்ளார்.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்திற்கு பிரவீன் ஒளிப்பதிவு செய்கிறார் மற்றும் அஜீஷ் அசோக் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் மட்டும் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். மேலும், இந்த படத்துக்கு ‘நாய் சேகர்’ என்று தலைப்பு வைத்து உள்ளனர்.

இதையும் பாருங்க : மீண்டும் புதிய சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள லிவிங்ஸ்டன் மகள் (படிக்க போறன்னு சொல்லிட்டு தான போனாரு )

- Advertisement -

இந்நிலையில் நடிகர் வடிவேலு பல வருடங்களுக்கு பிறகு தற்போது தான் நடிக்க இருக்கும் படத்திற்கு தான் நாய் சேகர் என்ற தலைப்பு வைக்க திட்டமிட்டு இருந்தது.வடிவேலு நடிக்கும் இந்த படத்தை சுராஜ் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. அதோடு சில வாரங்களாகவே சோசியல் மீடியாவில் இந்த படம் தலைப்பு குறித்து சதிஸ்க்கா? வடிவேலுக்கா? என்று பல சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில் தற்போது இந்த நாய் சேகர் தலைப்பு சதீஷ்க்கு தான் என்று உறுதியாக இருப்பது இந்த பர்ஸ்ட் லுக் மூலம் உறுதியானது.

மேலும், நடிகர் வடிவேலு நடிக்கும் தன்னுடைய புதிய படத்தை வேறு ஒரு தலைப்பை வைத்து தான் எடுக்கவேண்டிய சூழல் உருவாகி உள்ளது. இப்படி ஒரு நிலையில் இது குறித்து விளக்கமளித்துள்ள சதிஷ், இந்த படத்தில் ஒரு நாயும் முக்கிய ரோலில் நடிக்கிறது அதனால்தான் இந்த குறிப்பிட்ட தலைப்பை வைத்தோம் இந்த படத்தின் சூட்டிங் எடுப்பதற்கு முன்பாக தெரிந்திருந்தால் கண்டிப்பாக இந்த டைட்டிலை கொடுத்திருப்போம் எனக்கும் நாய் சேகர் என்று சொன்னதும் வடிவேல் சார் தான் நினைவிற்கு வருவார், ஆனால், நாங்கள் படப்பிடிப்பை முடித்து விட்டதால் எங்களுக்கு வேறு வழி இல்லாமல் தான் இந்த தலைப்பை வைத்தோம்.

-விளம்பரம்-
Advertisement