மீண்டும் புதிய சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள லிவிங்ஸ்டன் மகள் (படிக்க போறன்னு சொல்லிட்டு தான போனாரு )

0
2844
jovitha
- Advertisement -

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியலில் இருந்து விலகியதை தொடர்ந்து தற்போது புதிய சீரியல் மூலம் என்ட்ரி கொடுக்க உள்ளார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா. விஜய் டிவியை போல சன் தொலைக்காட்சியிலும் சினிமா டைட்டில்களை கொண்ட பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. வானத்தை போல. பூவே உனக்காக, ரோஜா என்று சினிமா டைட்டிலில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் பூவே உனக்காக சீரியல் சன் டிவியின் வெற்றிகரமான சீரியல்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

-விளம்பரம்-
Poove Unakkaga serial Wiki, Cast & Crew, Hero, Heroine, names, Sun TV

இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ஜோவிதா. தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவரான லிவிங்ஸ்டன் மகளான இவர், கலாசல் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். இந்த படத்தின் ராதாவின் மகன் தான் நாயகனாக நடித்து இருந்தார். ஆனால், இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியடையவில்லை.

இதையும் பாருங்க : எப்படி இருக்கிறது லாஸ்லியாவின் முதல் படம் ‘பிரெண்ட்ஷிப்’ – முழு விமர்சனம்

- Advertisement -

இதன் பின்னர் தான் இவர் பூவே உனக்காக தொடரில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வந்தார். இந்த தொடர் மூலம் இவருக்கு ஏகப்பட்ட பிரபலம் கிடைத்தது. இப்படி ஒரு நிலையில் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தனது உயர் கல்வி படிப்பை தொடருவதற்காக இந்த சீரியலில் இருந்து விலகுவதாக கூறி இருந்தார்.

இவரை தொடர்ந்து இந்த கதையின் நாயகன் அருணும் விலக தற்போது அவருக்கு பதிலாக அசீம் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஜோவிதா மீண்டும் சன் டிவி புதிய சீரியலின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார். கஸ்தூரி நிவாஸா என்ற கன்னட சீரியலின் ரீமேக்காக உருவாகும் தொடரில் ஜோவிதா நடிக்கவுள்ளார். இதில்  கார்த்திக் வாசு மற்றும் நடிகை அம்பிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். 

-விளம்பரம்-
Advertisement