கடவுள் நம்பிக்கை பற்றி நடிகர் சத்யராஜ் பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவர் சத்யராஜ். இவர் ‘கட்டப்பா’ என்ற ஒற்றைச் சொல்லின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் கட்டி போட்டவர். மேலும், இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர்.

இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக தமிழில் இவர் நடிப்பில் வெளியாகியிருந்த படம் ‘ தோழர் சேகுவரா’ .
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது.
சத்யராஜ் திரைப்பயணம்:
தற்போது சத்யராஜ் அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் தான் கூலி. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன், உபேந்திரா, நாகர்ஜுனா, சௌபின் சாகிர், ஆமீர் கானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

சத்யராஜ் பற்றிய தகவல்:
இது மட்டும் படத்தில் இன்னும் சில படங்களில் சத்யராஜ் கமிட்டாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு பக்கம் இருக்க, நடிகர் சத்யராஜ் கடவுள் நம்பிக்கை அற்றவர் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் பெரியாரிஸ்ட். இப்படி இருக்கும் நிலையில் கடவுள் நம்பிக்கை பற்றி சத்யராஜ் பேசியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் வேலு பிரபாகரன்.
விழாவில் சத்தியராஜ் சொன்னது:
இவர் இயக்குனர் மட்டும் இல்லாமல் ஒளிப்பதிவாளர், நடிகர் எனப் பன்முகம் கொண்டவர். இவர் பெரியார் சிந்தனையை கொண்டவர். இப்படி இருக்கும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நல குறைவால் வேலு பிரபாகரன் இறந்தார். மேலும், வேலு பிரபாகரன் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றிருக்கிறது. இதில் கலந்து கொண்ட நடிகர் சத்யராஜ், வேலு பிரபாகரன் எம்ஜிஆர் ரசிகர். எம்ஜிஆரை போல பலமுறை என்னிடம் நடித்துக் காட்டியிருக்கிறார். 1988 ஆம் ஆண்டு வெளிவந்த பிக்பாக்கெட் என்ற படத்தில் அவருடன் நான் இணைந்து பணியாற்றி இருக்கிறேன்.
https://www.youtube.com/watch?v=-sT5uNKnT3c
கடவுள் நம்பிக்கை பற்றி சொன்னது:
இங்குள்ள நிறைய பேருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. மகிழ்ச்சியாக இருப்பதற்கு கடவுளை கும்பிட வேண்டிய அவசியம் கிடையாது. பொருளாதாரம் தவிர எனக்கும் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. அதனை சமாளிப்பதற்கு கடவுள் மறுப்பு கொள்கை எனக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கிறது. ஒரு சிலர் என்னை இந்து கடவுளுக்கும், நம்பிக்கைகளுக்கு மட்டுமே நான் எதிரானவன் என்று நினைத்திருக்கிறார்கள். நான் அனைத்து கடவுள் நம்பிக்கைகளுக்கும் எதிரானவன் தான். சமூக வலைத்தளங்கள் மூலம் பெரியார் சிந்தனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறியிருக்கிறார்.






