தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர் சினிமா சத்யராஜ். ‘கட்டப்பா’ என்ற ஒற்றைச் சொல்லின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் கட்டி போட்டவர். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். சத்யராஜுக்கு சிபிராஜ் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். சிபிராஜ் படத்தில் நடித்து வருகிறார். ஆனால், திவ்யா அப்படி இல்லை. தனது அப்பாவை போலவே இவரும் ஒரு நாத்திகவாதி. இந்தியாவில் உள்ள டாப் நியூட்ரிஷனிஸ்ட்களில் ஒருவராக சத்யராஜ் மகள் திவ்யா இருக்கிறார். இவர் நியூட்ரிஷியன் துறையில் எம் ஃபில் பட்டம் பெற்றுள்ளார்.

இவர் சர்வதேச அளவில் பட்டம் துறையில் பல கான்ஃபரன்ஸ்களும் நடத்தி இருக்கிறார். கடந்த இரண்டு வருடங்களாக இவர் திமுக கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார். அதுவும் சட்டமன்ற தேர்தல் நடந்ததால் விஜயை விமர்சித்து இவர் கூறிய விஷயம் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது. இதை அடுத்து தனிப்பட்ட வாழ்க்கை பற்றி திவ்யா சத்யராஜ், திருமணம் என்பது எல்லோருக்குமே அவசியம் என்று நான் நினைக்கவில்லை. திருமணத்தில் நடைபெறும் வழக்கமான சடங்களான தாலி கட்டுவது, மோதிரம் மாட்டுவது போன்றவற்றிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. ஜாதகம் பார்ப்பது சடங்குகளை பின்பற்றி நடப்பதிலும் எனக்கு நம்பிக்கை இல்லை.
திவ்யா பேட்டி:
ஆண்- பெண் இருவருமே ஒருவரை ஒருவர் பிடித்திருந்தால் அவர்கள் இணைந்து வாழலாம். அதற்காக திருமணம் செய்ய வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. ஒரு வீட்டில் தான் அவர்கள் வாழ வேண்டும் என்று கட்டுப்பாடும் இருக்க வேண்டியதில்லை. அவரவர்கள் வீட்டில் கட்டுப்பாடும் அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை தொடரலாம். திருமணம் செய்த பிறகு குழந்தை பெற வேண்டும் என்ற கட்டாயத்தை நான் எப்போதுமே ஏற்றுக்கொள்ள மாட்டேன். திருமணம் செய்து கொள்ளாமல் கூட குழந்தையை பெற்றுக் கொள்வதில் எனக்கு முழு சம்மதம். அதனால் எனக்குத் திருமண பந்தத்தில் நம்பிக்கையே கிடையாது. அதேபோல் எனக்கு ஜாதகமே கிடையாது. அதை நான் பெருமையாக சொல்வேன் என்று கூறியிருந்தார்.

திருமணம் பற்றி சொன்னது:
இப்படி இவர் பேசியிருந்தது குறித்து சிலர் ஆதரவு தெரிவித்தாலும், சிலர் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் சத்யராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், திருமணத்தைப் பற்றி ஜாதி சடங்குகளை பற்றி எல்லாம் என்னுடைய மகள் பேசி இருந்தார். இதற்கு சிலர் ஆதரவாகவும் சிலர் எதிர்ப்பும் தெரிவித்திருக்கிறார்கள். என்னிடம் இதைப் பற்றி கேள்விகளும் எழுப்பப்பட்டது. உங்களுக்கே தெரியும் நான் ஒரு பெரியாரிஸ்ட். சாதி, மதம், ஜோதிடம் போன்றவற்றில் எனக்கு நம்பிக்கையும் கிடையாது உடன்பாடு இல்லை.
View this post on Instagram
சத்யராஜ் வீடியோ:
அதேபோல திருமணம் குறித்து என்னிடம் கேட்டார்கள். என்னை பொறுத்தவரை திருமணம் என்பது கட்டாயம் கிடையாது. அது ஒரு தனி நபருடைய விருப்பத்தை பொறுத்தது. திருமணம் செய்வது, விவாகரத்து பெறுவது, தனியாக வாழ்வது, திருமணம் செய்து கொள்ளாமலே தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் அது அவர்களுடைய விருப்பம். இப்போது இருக்கும் நவீன மருத்துவ துறையில் அதற்கான வாய்ப்புகள் உள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் இது தனி நபருடைய விருப்பம் சார்ந்த விஷயம்தான். திவ்யாவுடைய கருத்தும் என்னுடைய கருத்தும் ஒன்றுதான்





