‘அவங்ககிட்ட கேட்கலாமே’ – நடிகர் சங்கத்தின் கோடிக்கணக்கான கடன்,வெளுத்து வாங்கிய செந்தில்.

0
1285
- Advertisement -

நடிகர் சங்க கட்டிடத்தை கட்டுவதற்கு வங்கியில் 40கோடி ரூபாய் வாங்க போவதாக விஷால் கூறியதற்கு நடிகர் செந்தில் காட்டமாக பதிலளித்தார். சங்கத்திற்கு என பல ஆண்டு காலமாகவே கட்டிடம் கட்டும் திட்டம் இருந்து கொண்டிருக்கின்றது. இதனை எதிர்த்து நடிகர் சங்க கட்டிடம் கட்ட வேண்டும் என்று நடிகர் விஷால் பாண்டவர் அணி உருவாக்கினார். 2015 ஆம் ஆண்டு நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் ராதாரவிக்கு எதிராக விஷால் களமிறங்கினார். பின் இரு அணிக்கும் இடையே வார்த்தை மோதல்கள் பயங்கரமாக உச்சகட்டத்தை எட்டி இருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இறுதியில் விஷால் அணி அனைத்து பதவிகளையும் பெற்று நாசர் தலைமையில் விஷால் செயலராக பதவி ஏற்றார்.

-விளம்பரம்-

நடிகர் சங்கம் தேர்தல் பற்றிய விவரம்:

இந்த பதவிக்காலம் முடிவடைந்து 2018 ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய தேர்தல் 2019 ஆம் ஆண்டு தாமதமாக அறிவிக்கப்பட்டது. விஷாலுக்கு எதிராக புதிய அணியை உருவாக்கி இருந்தார் ஐசரி கணேஷ். இவருக்கு ஆதரவாக பாக்யராஜ் இருந்தார். ஐசரி கணேஷ் ஆதரவில் பாக்யராஜ் அணி போட்டியிட்டது. பின்னர் இரு அணிகளுக்குள் கடும் போட்டி ஏற்பட்டது. தேர்தல் நடைபெற்று முடிந்தது. இருந்தாலும் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்ட உரிமையாளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது.

- Advertisement -

இதனால் பல்வேறு பிரச்சனைகள் எழுந்ததால் வாக்குகள் எண்ணப்படவில்லை. இதனை அடுத்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவைத் தொடர்ந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் தேர்தல் விசாரித்தது வாக்குகளை எண்ண உத்தரவிட்டது. இறுதியில் மீண்டும் நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர் தலைமையில் போட்டியிட்ட விஷால், கார்த்தி, கருணாஸ் உள்ளிட்ட பாண்டவர் அணி மீண்டும் வெற்றி பெற்றனர்.

நடிகர் சங்க கூட்டம்:

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்கூட்டமானது என்று சென்னையில் காமராஜர் அரங்கத்தில் நேற்று காலை 10 மணிக்கு துவங்கியது. இந்தக் கூட்டத்திற்கு நடிகர் சங்க தலைவர்  நடிகர் நாசர் தலைமையேற்று கூட்டத்தை தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தியும் பொதுச்செயலாளர் விஷாலும் கலந்து கொண்டு உரையாற்றினர். இந்தக் கூட்டத்தில் செயல்படுத்தினார்கள் தளபதி தினேஷ் நந்தா ரமணா பிரசன்னா குஷ்பு பசுபதி ராஜேஷ் கோவை சரளா சரவணன் பிரேம்குமார் உட்பட முன்னணி நடிகர்கள் நடன கலைஞர்கள் மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தை முடித்த பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் விஷால் இரண்டாவது முறையாக எங்களை தேர்ந்தெடுத்ததற்கு நன்றியும் கூறினார்.

-விளம்பரம்-

நடிகர் நடிகைகளுக்காக விரைவில் கட்டிடம் கட்டி முடிக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். அதற்கான பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது என்றும் கூறினார். அதுபோலவே நிச்சயமாக அடுத்த பொதுக்குழு கூட்டம் சங்கத்தின் கட்டிடத்தில் தான் நடைபெறும் என்று நான் உறுதி அளிக்கிறேன் என்றும் அவருக்கு கூறினார். தங்கள் அணி அளித்து வாக்குறுதிகள் அனைத்தையும்  நிறைவேற்றி உள்ளதாகவும் அவர் கூறினார். சங்க கட்டிடம் கட்டி முடிக்க வங்கியில் இருந்து 40 கோடி ரூபாய் கடன் பெற தீர்மானம் எனது இயற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். விரைவில் கட்டிட சங்கம் குறித்து ஒரு நல்ல செய்தி வரும் என்றும் அவருக்கு கூறினார். கட்டிட சங்கம் கட்டி முடித்த பின் அதில் நடைபெறும் முதல் நிகழ்ச்சியை எனது திருமணம் என்றும் அவர் கூறினார்.

நடிகர் செந்தில் பதில்:

நேற்றைய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் முடித்த பின் நடிகர் செந்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது நடிகர்களிடமே நடிகர் சங்க  கட்டிடத்திற்கான நிதியை வசூல் செய்து செய்யலாமே என்று  பத்திரிகையாளர்கள் கேட்டபோது “அதற்கு ஊடகங்களாக நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும். கோடி கோடியாக சம்பளம் வாங்கும் நடிகர்களிடம் இதை நீங்களே கேளுங்கள்” என்று  பத்திரிக்கையாளர்களும் நாட்டமாக பதில் அளித்தார்.

Advertisement