சுதப்பிய இசை நிகழ்ச்சி, புலம்பி தள்ளும் ரசிகர்கள், ட்விட்டரில் ரஹ்மானின் செயலால் மேலும் கடுப்பாகும் ரசிகர்கள்.

0
2212
- Advertisement -

ஏ ஆர் ரகுமானின் இசை கச்சேரி குறித்து ரசிகர்கள் கண்டித்து பதிவிட்டு இருக்கும் பதிவு தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற பெயரில் ஏ ஆர் ரகுமான் இசை கச்சேரி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல நகரங்களிலும் நடைபெற திட்டமிட்டு இருக்கிறார்கள். அதோடு வெளிநாடுகளிலும் இந்த இசை கச்சேரி நடக்க இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. மேலும், சென்னை பனையூரில் ஏ ஆர் ரகுமான் இசைக் கச்சேரி நடக்க இருந்தது. ஆனால், திடீர் மழை பெய்து நிகழ்ச்சி நடத்தும் இடத்தில் நீர் தேங்கி இருந்தது. இதனால் இசை கச்சேரி ரத்து செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் எல்லோரும் சோகத்தில் இருந்தார்கள்.

-விளம்பரம்-

ஏ.ஆர்.ரகுமான் இசை கச்சேரி:

மேலும், இது தொடர்பாக ஏ.ஆர் ரஹ்மானும் சமூக வலைத்தளங்களில் மன்னிக்கவும் கேட்டிருந்தார். தற்போது அந்த இசை கச்சேரி நேற்று நடைபெற்றது. டிக்கெட் வாங்கியும் ஆயிரக்கணக்கானோர் மக்கள் அவதிப்பட்டனர். பார்க்க முடியாத அளவுக்கு நிகழ்ச்சி ஏற்பாடு மோசமாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், 10000 ரூபாய் டிக்கெட் வாங்கி தங்களால் உள்ளே கூட செல்லவில்லை என்று பலரும் புலம்பி இருக்கின்றனர். இந்த நிலையில் இது தொடர்பாக ரசிகர்கள் பதிவில் கூறியிருப்பது, செப்டம்பர் 10ஆம் தேதி அதே இடத்தில் நிகழ்ச்சி நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகிருந்தது.

- Advertisement -

நிகழ்ச்சியில் நடந்த சம்பவம்:

இதனால் இந்த முறை திட்டமிட்டபடி நிகழ்ச்சி நடக்கும் என்று உற்சாகத்தில் இருந்தார்கள். ஆனால், கூட்டம் தான் ஆட்டு மந்தைகளைப் போல அதிகமாக இருந்தது. ஏழு மணி நிகழ்ச்சிக்கு 5 மணிக்கு சென்றவர்கள் கூட உள்ளே அனுமதிக்கப்படவில்லை இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் எல்லாம் விற்றுவிட்டது. இருந்தாலும், இன்னும் ஆன்லைனில் டிக்கெட்டுகள் புக் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

நிகழ்ச்சியில் நடந்தது:

இது ஏன் என்று புரியவில்லை? அது மட்டும் இல்லாமல் 2000, 5000 என வெளியூர்களிலிருந்து செலவு செய்து வந்தவர்களுக்கு கூட கார், பைக் பார்க்கிங் என்று திருவிழா காலங்களில் வசிப்பது போல கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இது ரொம்பவே வருத்தத்தை அளிக்கிறது.மேலும், விற்கப்பட்ட டிக்கெட்டுகளை எப்படி நிகழ்ச்சி ஏற்பாடாளர்கள் திருப்பியும் விற்றார்கள் என்று தான் பலருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது.

-விளம்பரம்-

இப்படி பல பிரச்சனைகள் ஏற்பட்டதற்கு ஏ ஆர் ரகுமான் தான் பொறுப்பேற்க வேண்டும். இரண்டு மூன்று பாடல்கள் முடிவதற்குள்ளே இந்த இடத்திலிருந்து கிளம்பினால் போதும் என்ற அளவிற்கு சூழல் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், நிகழ்ச்சி நடத்துபவர்கள் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. டிக்கெட் விற்றால் போதும், பார்க்கிங் கட்டணம் வசூலித்தால் போதும் என்று தான் இருந்தார்கள். கொஞ்சம் கூட பாதுகாப்பு வசதி அங்கு இல்லை. 50 வயதுமிக்க பெண் ரசிகை ஒருவர் கூட வெயில் தாங்க முடியாமல் கீழே சரிந்து விழுந்தார்.

ரஹ்மானின் ரியாக்ஷன் :

இப்படி ஒரு நிலையில் ட்விட்டர் வாசி ஒருவர் ‘சில துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளால் ஒரு அழகான இசை நிகழ்ச்சிய இப்படி சிதைக்கட்டது பார்க்க வருத்தமாக இருக்கிறது. அனைவரும் பத்திரமாக வீடு திரும்பினர் என்று நம்புகிறேன். நாங்கள் 10 பேர் கொண்ட குழுவுடன் உள்ளே சென்றோம், வெளியே வருவதில் தாமதம் ஏற்பட்டதைத் தவிர வேறு எந்த பிரச்சனையும் இல்லை’ என்று பதிவிட்டு இருக்கும் பதிவை ஏ ஆர் ரஹ்மான் ரீ-டீவீட் செய்துள்ளார்.

ரசிகர்கள் கோபம்:

ரஹ்மானின் இந்த செயலால் 1000 பேர் புலம்பி கொண்டு இருக்கின்றனர். ஆனால், உங்களுக்கு இந்த பதிவு தான் கண்ணுக்கு தெரிகிறதா என்று திட்டி தீர்த்து வருகின்றனர். மேலும், ரஹ்மானை திட்டியவர்களை விட இந்த நிகழ்ச்சியை இந்த அளவிற்கு மோசமாக ஒருங்கிணைத்த ACTC event என்ற நிறுவனத்தை தான் கடுமையாக சாடி இருந்தனர். அதிலும் உள்ளே இருந்த பணியாளர்கள் சிலர் நிகழ்ச்சியை பார்க்க வந்த ரசிகர்களை தரக்குறைவாக பேசி இருந்தனர். இப்படி ஒரு நிலையில் ACTC event நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளது.

அதில் ‘சென்னை மக்களுக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். இந்த அபாரமான வரவேற்பும், கட்டுக்கடங்காத கூட்டமும் எங்கள் நிகழ்ச்சியை பெரும் வெற்றியடையச் செய்துள்ளன. நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாதவர்களிடம் நாங்கள் மனதார மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். இதற்கான முழு பொறுப்பையும் நாங்களே ஏற்கிறோம். நாங்கள் உங்களோடு இருக்கிறோம்’ என்று கூறியுள்ளனர். அந்த பதிவை ஏ ஆர் ரஹ்மான் லைக் செய்து இருக்கிறார்.

Advertisement