ஜீன்ஸ் பட ஐஸ்வர்யாவை ரோல் மாடலாக வைத்து அண்ணன் தம்பிகளை ஏமாற்றிய Fake ஐஸ்வர்யா.(அதுவும் ஒருத்தர் போலீஸ்)

0
500
aishwarya
- Advertisement -

முகநூல் போலி கணக்கு மூலம் அக்கா-தங்கை என்ற இரண்டு வேடத்தில் நடித்து காதலிப்பதாக சொல்லி 34 லட்சம் ரூபாவை ஏமாற்றி இருக்கிறார் கேடி லேடி ஐஸ்வர்யா. தற்போது இந்த தகவல் சோஷியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஜீன்ஸ் படத்தில் நடிகை ஐஸ்வர்யா அவர்கள் அக்கா- தங்கை என இரட்டையர்களாக நடித்து கதாநாயகர்களுக்கு டேக்கா கொடுத்த காட்சிகளை பார்த்து இருப்போம். அதே பாணியில் முகநூலில் போலியான புகைப்பட மூலம் தன்னை அக்கா- தங்கை என்று டபுள் ஆக்ட் கொடுத்து 34 லட்சம் ரூபாவை சுருட்டி இருக்கிறார் கேடி லேடி ஐஸ்வர்யா. சிவகங்கை மாவட்டம் மூலக்கரை கிராமத்தை சேர்ந்தவர் சேர்ந்தவர் பாரதிராஜா.

-விளம்பரம்-

இவர் திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் போலீஸ்ஸாக பணியாற்றி இருந்தார். பின் இவர் கடந்த மூன்று மாதங்களாக சென்னை திருவொற்றியூர் கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் ஆக பணியாற்றி வருகிறார். கடந்த ஜனவரி மாதம் பாரதிராஜாவின் முகநூல் பக்கத்தில் ஆவடி ஆனந்தம் நகர் பாரதிதாசன் தெருவை சேர்ந்த ஐஸ்வர்யா என்ற 26 வயது இளம்பெண் நட்பாகி இருக்கிறார். மேலும், அவர் தான் டாக்டருக்கு படித்து வருவதாக பாரதிராஜாவிடம் கூறி இருக்கிறார். பின் அவரிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதற்கு பிறகு ஐஸ்வர்யா திருமணம் செய்து கொள்வதாக பாரதிராஜாவிடம் ஆசையை தூண்டி பூஜை செய்யவும், நகைகள் வாங்கும் பணம் வேண்டுமென்று முதல் தவணையாக 4 லட்சம் ரூபாய் கேட்டிருக்கிறார். பாரதிராஜாவும் அந்த பணத்தை ஐஸ்வர்யாவின் தந்தை பழனியின் வங்கிக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அதற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பேசி மயக்கி மொத்தமாக 16 இலட்சம் ரூபாவை பாரதிராஜாவிடம் இருந்து சுருட்டி இருக்கிறார். அதோடு விடாமல் தனக்கு ஒரு தங்கை இருப்பதாக ஐஸ்வர்யா கூறி பாரதிராஜாவை நம்ப வைத்து இருக்கிறார். பின் பாரதிராஜா தனது பெரியப்பா மகன் மகேந்திரன் என்பவரை ஐஸ்வர்யாவுக்கு முகநூல் பக்கத்தில் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.

ஐஸ்வர்யா தனது தங்கை என்று போலியான புகைப்படத்தை பதிவிட்டு முகநூல் கணக்கை அறிமுகப்படுத்தி இருக்கிறார். பின் மகேந்திரனிடம் பேசிய ஐஸ்வர்யா திருமணம் செய்வதாக மீண்டும் ஆசை வார்த்தைகளை பேசி 20 இலட்சம் ரூபாவை வாங்கி இருக்கிறார். இப்படி கடந்த 6 மாதத்தில் மட்டும் இவர் 34 லட்சம் ரூபாவை ஏமாற்றி இருக்கிறார். அதோடு இல்லாமல் ஐஸ்வர்யாவின் சொக்கவைக்கும் குரலில் மயங்கிய மகேந்திரன் ஒரு சவரன் தங்கச் சங்கிலியும், ஒரு ஜோடி கொலுசையும் கொரியர் மூலம் காதல் பரிசாக அனுப்பி வைத்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக பாரதிராஜா மற்றும் மகேந்திரன் உடன் இருந்த தொடர்பை ஐஸ்வர்யா துண்டித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இதனையடுத்து பணத்தை பறிகொடுத்த காவலர் பாரதிராஜா அவருடைய சகோதரர் மகேந்திரன் இருவரும் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சென்னை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். பின் காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் விசாரணையை மேற்கொண்டு கேடி லேடி ஐஸ்வர்யாவை கைது செய்தனர். உண்மையாலுமே நிஜ ஐஸ்வர்யாவை பார்த்து சகோதரர்கள் இருவரும் அதிர்ச்சி அடைந்து விட்டார்கள். ஏன்னா, முகநூலில் சினிமா நடிகை போல தெரிந்த ஐஸ்வர்யாவை நிஜத்தில் கண்டு பேரதிர்ச்சி அடைந்து விட்டார்கள். அதுமட்டுமில்லாமல் அவர் டாக்டரும் இல்லை, அவருக்கு தங்கையும் இல்லை என்பது விசாரணையில் தெரிய வந்தது.

மேலும், அக்கா– தங்கை என போலியான புகைப்படங்களை காட்டி பாரதிராஜாவிடம், மகேந்திரனிடம் மாறி மாறி செல்போனில் பேசி அல்வா கொடுத்து இருப்பது தெரிந்தது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சோசியல் மீடியாவை பொழுது போக்குகாகவும், பயனுள்ளதாகவும் மட்டும் பயன்படுத்துங்கள். உறவுகளை தேடும், காதலை வளர்க்க பயன்படுத்தினால் இந்த மாதிரி ஆட்களிடம் தான் ஏமாற வேண்டும் என்று காவல் அதிகாரிகள் கூறி இருக்கிறார்கள்.

Advertisement