அப்பாவும் கவுண்டமணி அங்கிளும் பேசுறது இல்லையா – செந்திலின் டாக்டர் மகன் அளித்த பேட்டி.

0
4378

தமிழ் சினிமா உலகில் காமெடி என்றால் முதலில் அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது கவுண்டமணி– செந்தில் காம்போ தான். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த காமெடி படங்கள் அல்டிமேட் என்று சொல்லலாம். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. காலங்கள் மாற மாற இவர்களுடைய பயணமும் மாறிவிட்டது. இருந்தாலும் இப்போது வரை தமிழ் சினிமா உலகில் கவுண்டமணி –செந்தில் காம்போவை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் கவுண்டமணி– செந்தில் இருவரும் பேசுவதில்லை என்று சோஷியல் மீடியாவில் வந்த வதந்திக்கு செந்திலின் மூத்த மகனான மணிகண்ட பிரபு தற்போது பதிலளித்துள்ளார்.

செந்திலின் மூத்த மகன் மணிகண்டன் பிரபு பல் மருத்துவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் கூறியது, சின்ன வயதில் எனக்கும் நடிப்பதில் அதிக ஆர்வம் இருந்தது. எங்கள் குடும்பத்தில் மருத்துவர் யாரும் இல்லை என்பதால் அப்பா என்னை மருத்துவம் படிக்கச் சொன்னார். அதற்கு பிறகு நானும் டாக்டருக்கு படித்தேன். பின் நான் உன்னை எனக்கு பிடித்திருக்கிறது என்ற ஒரு படத்தில் நடித்தேன். ஆனால், எனக்கு மருத்துவத் துறையில் அதிக ஆர்வம் இருந்ததால் நான் என்னுடைய துறையிலேயே அதிக கவனம் செலுத்தி விட்டேன்.

இதையும் பாருங்க : இது சர்வைவருக்கு முன், சர்வைவருக்கு பின் – பார்வதி போட்ட புகைப்படம். பங்கம் செய்யும் ரசிகர்கள்.

- Advertisement -

சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் கவுண்டமணி அங்கிள் அப்பா கூட பேசறது இல்லை என்று நிறைய வதந்திகள் வருகிறது. ஆனால், அது உண்மை இல்லை. எப்போதும் அப்பாவும் அங்கிளும் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் உடைய அண்ணன் –தம்பி என்ற உறவு இப்போதைக்கும் நீடித்து கொண்டு தான் உள்ளது. அவர்களுடைய காம்போவை எல்லோரையும் போல் நானும் நிறைய மிஸ் பண்ணுகிறேன். அப்பா வெறும் காமெடி நடிகர் மட்டும் இருக்கக்கூடாது அவர் பல கதாபாத்திரங்களில் பண்ண வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கேன்.

இப்போ அப்பா ஒரு படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அப்படி ஒரு கதாபாத்திரத்தில் அவரைப் பார்க்க நான் ரொம்ப ஆர்வமாக இருக்கிறேன். இவ்வளவு வயதானாலும் அவர் எப்போதும் எனர்ஜியுடனும் தன்னம்பிக்கையோடும் நடிக்கிறது எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கு என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-
Advertisement