சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெவ்வேறு குணாதிசியங்கள் நிறைந்த மனிதர்களை சவால்கள் நிறைந்த ஓரிடத்தில் சேர்த்து அவர்களுக்கு கொடுக்கும் சவால்களை கடக்கும் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்ட ரியாலிட்டி நிகழ்ச்சி தான் சர்வைவர். இந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் 18 பேர்களை இரு அணிகளாக காடர்கள், வேடர்கள் என பிரித்து சவால்கள் தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியில் பார்வதி கலந்து கொண்ட போதே அவர் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தது. பார்வதி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல் நாள் முதலே அவரது பேச்சுகளும் செயல்பாடுகளும் ரசிகர்களை எரிச்சலடைய செய்தது, அதுமட்டுமல்லாமல் சக போட்டியாளர்கள் இடம் பார்வதி நடந்துகொண்ட விதத்தை பார்த்து ஓரிரு நாட்களிலேயே சக போட்டியாளர் இடம் விரோதத்தை சம்பாதித்துக் கொண்டார்.
இதையும் பாருங்க : என்ன இது Pubg லெவல் 3 ஜாக்கெட்டா, ரித்து வர்மாவின் முதல் கிளாமர் போஸை கண்டு வியந்த ரசிகர்கள்.
சொல்ல்லப்போனால் இவர் முதல் வாரமே நாமினேட் செய்யப்பட்டார். ஆனால், அந்த சமயத்தில் லட்சுமி, சிருஷ்டியை எலிமினேட் செய்ததால் பார்வதி எஸ்கேப் ஆனார். இப்படி ஒரு நிலையில் இவர் மீண்டும் நாமினேட் செய்யப்பட்டு மூன்றாம் உலகிற்கு அனுப்பப்பட்டு இருந்தார் மூன்றாம் உலகத்திற்கு அனுப்பப்பட்ட பார்வதி கண்டிப்பாக வெளியேறி விடுவார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் கடந்த வாரம் இவருக்கும் ராம் இருக்கும் போட்டி நடைபெற்றது.
இதில் ராம் தோல்வியடைந்ததால் பார்வதி மீண்டும் தொடர்ந்தார். அந்த டாஸ்கை வென்ற பின்னர் பார்வதி போட்ட ஆட்டம் கொஞ்சம் நஞ்சம் கிடையாது. இப்படி ஒரு நிலையில் தான் நேற்றைய நிகழ்ச்சியில் இவருக்கும் காயத்ரிக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது. இதில் காயத்ரி சிறப்பாக விளையாடி வென்றதால் பார்வதி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்த ஒரு வெளியேற்றத்திற்காகத்தான் ரசிகர்கள் பலரும் ஆவலாக காத்துக் கொண்டிருந்தார்கள். இந்தநிலையில் சர்வைவர் அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பார்வதி இந்த நிகழ்ச்சிக்கு முன் எடுத்த தன் புகைப்படத்தையும் சர்வைவர் நிகழ்ச்சியில் கடைசியாக எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பகிர்ந்திருக்கிறார்.
அதில், தன்னுடைய பழைய பொலிவான முகத்தை மிஸ் செய்வதாக பதிவிட்டு இருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் பழைய புகைப்படம் மேக்கப்புடன் இருக்கிறது என்றும் இந்த புகைப்படம் மேக்கப் இல்லாமல் இருக்கிறது அவ்வளவுதான் என்று பார்வதியை அங்கமாக கலாய்த்து வருகின்றனர்.