தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான ஷாம் நேற்று இரவு கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழில் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான 12பி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஷாம். 12பி படத்திற்கு முன்னதாகவே விஜய் நடிப்பில் வெளியான குஷி படத்தில் விஜய்யின் நண்பராக ஒரு சில காட்சிகளில் தலை காண்பித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் இருக்கும் சாக்லேட் பாய் வரிசைகளில் இடம்பிடித்த நடிகர் ஷாம் 12பி படத்திற்கு பின்னர் எண்ணற்ற படங்களில் நடித்திருக்கிறார். மேலும், ஒரு சில படங்களில் துணை நடிகராகவும் நடித்துள்ளார். இறுதியாக கடந்த ஆண்டு காவியன் என்ற படத்தில் நடித்திருந்தார் நடிகர் ஷாம். மேலும், வெங்கட்பிரபு இயக்கத்தில் பார்ட்டி என்ற படத்திலும் நடித்து வந்தார் இந்த படத்தின் பணிகள் எப்போது துவங்கிய நிலையில் இந்த படம் பாதியிலேயே நின்று கொண்டிருக்கிறது.
இதையும் பாருங்க : லிப் லாக் மற்றும் படுக்கையறை காட்சி நிறைந்த வெப் சீரிஸில் லட்சுமி ராய் – ட்ரைலர் இதோ.
இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் நடிகர் ஷாம் வீட்டிலேயே சூதாட்டம் நடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் வெளியானது. இந்த தகவலின் பேரில், அங்கு சென்ற நுங்கம்பாக்கம் போலீஸார், சூதாட்டத்தில் ஈடுபட்டதாக நடிகர் ஷாம் உட்பட 14 பேரை கைது செய்தனர். நடிகர்கள் தவிர தொழிலதிபர்கள், தனியார் நிறுவன உயர் அதிகாரிகள், உணவக உரிமையாளர்கள், புதிய இயக்குனர், வழக்கறிஞர் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சூதாட்டத்தில் லட்சக்கணக்கான ரூபாய் பணபுழக்கம் நடைபெற்றது தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். நடிகர் ஷ்யாமை சொந்த ஜாமினில் போலீஸார் விடுவித்துள்ளனர். கொரோனா பிரச்சனை காரணமாக படப்பிடிப்புகள் முடங்கிய நிலையில் தனது வீட்டிலேயே நண்பர்களுடன் சேர்ந்து நடிகர் ஷாம் சூதாட்டம் விளையாடியதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.